Today Gold Silver Rate Update in Chennai 
வணிகம்

Gold & Silver : ரூ.85,000ஐ தாண்டியது தங்கம் : உச்சத்தில் வெள்ளி

Today Gold Silver Rate Update in Chennai : தங்கம் விலை 85 ஆயிரத்தை தாண்டிய நிலையில், வெள்ளி விலையும் இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டு இருக்கிறது.

Kannan

தொடர் உச்சத்தில் தங்கம் :

Today Gold Silver Rate Update in Chennai : டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவு, அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு, சர்வதேச முதலீட்டாளர்கள், தங்கத்தில் அதிக முதலீடு செய்வது உள்ளிட்ட காரணங்களால், தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம், ஆபரண தங்கம் கிராம், 10,510 ரூபாய்க்கும், சவரன், 84,080 ரூபாய்க்கும் விற்பனையானது நேற்று.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.84,400க்கும், ஒரு கிராம் ரூ.10,550க்கும் விற்பனை ஆனது.

85,000ஐ கடந்தது தங்கம் :

வாரத்தின் கடைசி நாளான இன்றும் தங்கம் விலை மீண்டும் அதிகரித்து சாமான்ய மக்களை கவலையில் ஆழ்த்தி இருக்கிறது. கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,640க்கு விற்பனை ஆகிறது(Gold Rate Today). சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.85,120க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,040 அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க : புதிய உச்சம் தொட்ட வெள்ளி: தங்கம் சற்று அதிகரிப்பு

உச்சத்தை தொட்ட வெள்ளி விலை :

தங்கம் விலைக்கு போட்டியாக வெள்ளி விலையும் வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. கிராமுக்கு ரூ.6 உயர்ந்து கிராம் ரூ.159-க்கும் கிலோவுக்கு ரூ.9 ஆயிரம் உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 59 ஆயிரம் ரூபாய்க்கும்(Silver Rate Today) விற்பனையாகிறது. தங்கம், வெள்ளி விலையேற்றம் நகை வாங்குவோரை கலக்கமடைய செய்துள்ளது. செப்டம்பர் முதல் தேதி ஒரு கிராம் ரூ.136க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ஒரு கிராம் ரூ.159-ஐ தொட்டு இருக்கிறது.