Gold & Silver : புதிய உச்சம் தொட்ட வெள்ளி: தங்கம் சற்று அதிகரிப்பு

Gold Silver Rate Today in Chennai : இதுவரை இல்லாத அளவு வெள்ளி விலை புதிய உச்சத்தை தொட்டிருக்கும் நிலையில், தங்கம் விலையும் சற்று அதிகரித்து இருக்கிறது.
Silver Price hit new high, gold prices also increased slightly in Chennai
Silver Price hit new high, gold prices also increased slightly in Chennai
1 min read

தங்கம் விலை தொடர்ந்து உயர்வு :

Gold Silver Rate Today in Chennai : சர்​வ​தேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிக​ரான இந்​திய ரூபா​யின் மதிப்பு ஆகிய​வற்​றின் அடிப்​படை​யில் தங்​கத்​தின் விலை நிர்​ண​யிக்​கப்​படு​கிறது. அமெரிக்​கா​வில் இறக்​குமதி செய்​யப்​படும் இந்திய பொருட்​களுக்கு 50 சதவீதம் வரி விதிப்​பு, டாலருக்கு நிக​ரான இந்​திய ரூபாயின் மதிப்பில் சரிவு உள்ளிட்ட காரணங்​களால் தங்​கம் விலை அதிரடி​யாக உயர்ந்​து வருகிறது.

வரலாறு காணா உச்சம் தொட்ட தங்கம் :

அந்த வகையில் கடந்த 23-ம் தேதி 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.85,120 என்ற புதிய உச்சத்தை எட்டியது. பின்னர் 2 நாட்கள் விலை குறைந்த தங்கம், இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.10,550-க்கு விற்பனை(Gold Price Today in Chennai 1 Gram) ஆகிறது. பவுனுக்கு ரூ.320 உயர்ந்து, ஒரு பவுன் தங்கம் ரூ.84,400-க்கு விற்பனை ஆகிறது. இதே போல 24 காரட் தங்கம் ரூ.92,072-க்கும், 18 காரட் தங்கம் ரூ.69,920-க்கும் விற்பனை ஆகிறது.

மேலும் படிக்க : Gold Price : உச்சத்தில் சென்ற தங்கம் விலையில் திடீர் மாற்றம்..!

புதிய உச்சம் தொட்ட வெள்ளி :

வெள்ளி விலை இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சத்தை தொட்டு(Silver Rate Today in Chennai), தங்கத்திற்கு போட்டியாக உருவெடுத்து இருக்கிறது. அதன்படி, சென்னையில் இன்று கிராம் ஒன்றுக்கு ரூ.3 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.153க்கு விற்பனை ஆகிறது. கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.3,000 உயர்ந்து, ரூ.1,53,000-க்கு விற்பனை ஆகிறது. திங்கட்கிழமை தொடங்கி இன்று வரை ஐந்து நாட்களில் வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 8 ரூபாயும் கிலோவுக்கு 8000 ரூபாயும் விலை உயர்ந்திருக்கிறது.

=============

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in