ZOHO Ulaa Browser Most Download App vs Google Chrome 
வணிகம்

கூகுளுக்கு இனி பை.பை! உலாவின் அம்சம் இதுதான்!

ZOHO Ulaa Browser App : கூகுளை பின் தள்ளி ஜோஹோவின் செயலியான உலா ஆஃப் தொடர்ந்து பதிவிறக்கம் செய்யப்பட்டு மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறது. இந்நிலையில் உலா குறித்து முழு விவரங்களை பார்க்கலாம்.

Bala Murugan

ஜோஹோவின் உலா :

ZOHO Ulaa Browser Most Download App : ஜோஹோ நிறுவனத்தின் இன்றைய வளர்ச்சி அரட்டை, உலா என தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதுவரை 1 கோடி பயனாளர்களுக்கு மேல் பதிவிறக்கம் செய்துள்ள நிலையில், சுதேசி இயக்கத்தை ஆதரிக்கும் வகையில் தமிழ்நாடு மற்றும் இந்திய மக்கள் தங்களின் சொந்த தயாரிப்புகளை உபயோகிக்க தொடங்கியுள்ளனர். அதன்படி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர்கள் பலர் தங்கள் மெயில் ஐடி, அலுவலக பணி மென்பொருள்கள் என அனைத்தையும் ஜோஹோவின் செயலிக்கு மாற்றியுள்ளனர். இதனால், ஜோஹோவின் வளர்ச்சி அசுர வேகத்திற்கு அதிகரித்து மக்கள் மத்தியில் மேலும் பிரபலமடைந்துள்ளது.

ஜோஹோவின் உலா அப்டேட்

உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் பயன்படுத்தப்படும் வெப் பிரவுசர்களான 'Google Chrome, Safari' க்கு சவால் விடும்படியாக இந்திய நிறுவனமான ZOHO நிறுவனத்தின், 'Ulaa'என்ற பிரவுசர் வெளியிடப்பட்டு, அதன் பதிவிறக்கமும் அனைவரின் தொலைபேசிகளிலும் இடம் பிடித்து வருகிறது. இந்நிலையில், இது ஆண்ட்ராய்டு, ஐபோன் என இரண்டு தளங்களிலும் வெளியிடப்பட்டிருக்கிறது. ' 'Ulaa (உலா)' என்றால் சுற்றுலா, உலவுதல், பயணம் போன்றவற்றை குறிக்கக்கூடிய தமிழ் சொல்லையே இந்த பிரவுசருக்கு பெயராக வைத்துள்ளனர். மேலும் உலாவின் லோகோ கிட்டத்தட்ட குரோமை போலவே வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்நிலையில், குரோமின் வேகத்திற்கு இதன் வளர்ச்சியும் செயல்பாடும் இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஜோஹோவின் தரப்பில் உலா

டேட்டா ட்ரான்ஸாக்ஷன், டேட்டா பிரைவசி போன்றவற்றை ஒரு மிகப்பெரிய போரே கூட வரலாம் என்று கூறி வருகின்றனர். அந்த அளவிற்கு முக்கியத்துவம் பெற்று இருக்கிறது நமது தரவுகளை பாதுகாக்கக்கூடிய 'data privacy'. ஆனால், இந்த பிரைவசி இப்பொழுது எந்த பிரவுசரிலும் கொடுக்கவில்லை என்று கூறி வருகின்றனர். உதாரணமாக நாம் ஒரு ப்ராடக்டைப் பிரவுஸ் செய்கிறோம் என்று தெரிந்தால் அதே பிராடக்டையோ அல்லது நாம் பிரவுசரில் தேடியது சம்பந்தமான விளம்பரங்களும் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். இப்படி நம் தரவுகளுக்கு ஒரு பாதுகாப்பு இருக்கிறதா என்று கேட்டால் ஒரு கேள்வி குறிதான்.

உலாவில் பாதுகாப்பான அம்சங்கள்

ஆனால் 'Ulaa (உலா)' பிரவுசரில் டேட்டா பிரைவசி 100% இருக்கின்றது என்று 'ZOHO' நிறுவனம் கூறுகிறது. அதாவது நீங்கள் பிரவுஸ் செய்வதையோ உங்களது தரவுகளையோ மூன்றாவது நபராக (Third Parties) யாருமே பார்க்க முடியாது என்று உறுதியளித்துள்ளது. உலா பிரவுசரை 'A first privacy browser' என்றும் கூறி வருகின்றனர்.

உலாவின் பதிவிறக்கம் குறித்து

உலா' பிரவுசர் இந்திய நாட்டைச் சார்ந்தது என்பதால் அதை பயன்படுத்துவது எங்களுக்குப் பெருமையாக இருக்கிறது என்று இந்தியர்கள் மற்றும் தமிழர்கள் கூறி வருகின்றனர். இன்னும் ஒரு சிலர் 'உலா பிரவுசரை யூஸ் பண்ணுவது பாதுகாப்பானது தானா?' என்பதையே கூகுளில் தான் தட்டிப் பார்க்க வேண்டியதாக இருக்கிறது என்றும் கூறியுள்ளனர்.

பதிவிறக்கம் அதிகரிப்பு

அது மட்டுமல்லாமல் 'Google Chrome' என்று இதுவரை தவிர்க்கமுடியாத பிரவுசர் ஒன்றை பல ஆண்டுகளாக பயன்படுத்திப் பழகி இருக்கிறோம் என்பதால் திடீரென்று உலாவிற்கு மாறுவதற்கும், உலா பிரவுசர் மக்களை சென்று அடைவதற்கு தாமதாகும் என்று நினைத்த நிலையில், இன்று அதன் பதிவிறக்கம் வேகம் மக்களிடையே பெரும் கிளர்ச்சியை தொடங்கியுள்ளது.

Made in India -வின் உலா

அப்படியே ZOHO கூறுவது போல் உலாவில் பிரைவசி இருந்தாலும் வெறும் பிரைவசி, ப்ராடக்ட்டிவிட்டி என்கின்ற இரண்டு ஃபீச்சர்ஸ் மக்களை மேலும் எந்த வகையில் கவர்ந்து இழுத்து, உபயோகப்படுத்த படும் என்று பார்க்கலாம். நம் சென்னை ஆப், 'Made in India' என்பதற்காக பலரும் இதை பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றனர். டெக் ஆப்களில் தமிழ் பெயர்களைப் பார்ப்பதும் அவ்வளவு அழகாக இருக்கிறது என்றும் பலர் கூறி வருகின்றனர்.