ரேஸில் அஜித்குமார் :
Ajith Kumar AK Car Racing Team Wins 3rd Place in Spain : அஜித்குமார் என்றால் தமிழகம் மட்டுமல்லாது, உலகளவில் ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அதுவும் சினிமாவை தாண்டி இவரின் ரேஸிற்கு, இளையவர்கள் முதல் முதியோர் வரை அப்படி ஒரு கூட்டமே கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இவர் தனது பயணத்தை சினிமா, ரேஸ் என்று கவனம் செலுத்தி வருகிறார். அதிலும் சமீபமாக ரேஸ் போகும் மீத நேரங்களில் தான் படங்களில் நடிக்கிறாராம்.
தொடர் வெற்றியில் அஜித்குமார் :
தொடர்ந்து துபாய், பிரான்ஸ், ஐரோப்பிய நாட்டில் 3 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார். அதிலும், 24 மணி நேர ரேஸிங் மற்றும் 12 மணி ரேஸிங் என 3 போட்டிகளில், இரண்டில் 3 ஆம் பரிசும், ஒரு போட்டியில் 2 ஆம் பரிசு பெற்றுள்ளார். இந்நிலையில் கடந்த 27 மற்றும் 28 தேதிகளில் நடைபெற்ற Creventic 24H என்ற ரேஸில் அஜித்குமாரின் ரேஸிங் அணி கலந்து கொண்டது. ஸ்பெயினில் நடைபெற்ற இந்த போட்டியில் அஜித்குமார் ரேஸிங் அணி மூன்றாவது(AK Car Race in Spain) இடத்தை வென்றுள்ளது.
குடும்பம் மற்றும் அணியை மேடை ஏற்றிய அஜித் :
தொடர் வெற்றிகளை குவித்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்து கொண்டிருக்கும் நடிகர் அஜித்குமாரின்(Ajith Kumar Racing) ரேஸிங் அணி. தற்போது ஸ்பெயினில் நடைபெற்ற போட்டியிலும் 3 ஆம் இடத்தை பிடித்து மீண்டும் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
மேலும் படிக்க : கார் பந்தயத்தில் முதல் இடம் : அஜித்குமார் அணி அசத்தல்
இவர் வெற்றி வாகை சூடி கோப்பை வென்ற காணொலிகள் இணையத்தில் வைராகும் நிலையில், அதே காணொளியில் வெற்றி பெற்று குடும்பம் மற்றும் தனது அணியினரின் குடும்பத்துடன் மேடை ஏறிய அஜித்குமார், கீழிறங்கி அவர்களை கைகளை பிடித்து கீழே இறக்கி விட்ட பிறகு மேடையில் இருந்து வெளியேறுவர். ரேஸிங்கை தாண்டி இவரின் இந்த செயலுக்கு அவரின் ரசிகர்கள் வீடியோவை ஷேர் செய்து, கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.ajith kumar next race