பிரதீப் ரங்கநாதன் டியூட் திரைப்படம் :
Dude Movie Trailer Release Today Update : கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, லவ்டுடே படத்தின் மூலம் நடிகராகி இன்று தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் பிரதீப் ரங்கநாதன்(Pradeep Ranganathan). தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து முன்ணனி நட்சத்திர பட்டியலில் தொடரும் இவரின் அடுத்த படமாக தீபாவளியன்று டியூட் திரைப்படம் வெளியாகவுள்ளது.
டியூட் திரைப்படம் :
இயக்குனர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் அடுத்ததாக ட்யூட் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இவர்களுடன் சரத்குமார், ரோகினி, ஹ்ரிதுஹரூன்,டிராவிட் மற்றும் பல முண்ணனி நடிகர்கள் நடித்துள்ளனர். படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ஊரும் பிளட் மற்றும் இரண்டாம் சிங்கிளான நல்லாரு போ மற்றும் 3 ஆம் சிங்கிளான சிங்காரி பாடல்கள் வெளியாகி மக்கள் மத்தியல் நல்தொரு வரவேற்பை பெற்றுவருகிறது.
வெளியான டியூட் டிரைலர்
தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ள இந்த திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக இருக்கிறது(Dude Movie Trailer Release Date). இந்நிலையில் படத்தின் அப்டேட்டை எதிர்நோக்கி இருந்த ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் 'டியூட்' படத்தின் டிரெய்லரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. வித்தியாசமான காதல் கதையாக உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
மேலும் படிக்க : வெளியான அவதார் படத்தின் அடுத்த டிரெய்லர்..! குஷியில் ரசிகர்கள்..!
டிரைலர் பார்வையாளர்கள்
படத்தினை எதிர்நோக்கி காத்திருக்கும் ரசிகர்களுக்கு, தற்போது வெளிவந்துள்ள டியூட் டிரெய்லர் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், டியூட் டிரெய்லர் வெளியாகி 3 மணி நேரத்தை கடந்துள்ள நிலையில், தற்பொழுது வரை 4 லட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது. டியூட் டிரெய்லரை போல படத்தின் சாதனை இருக்குமா என நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.