
அவதார் கொண்டாட்டம் :
Avatar 3 Trailer in Tamil : ஹாலிவுட் திரைப்படம் என்றாலே , அதற்கு உலகளவில் ரசிகர்கள் அதிகம். அதிலும் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் திரைப்படம் என்றால் டைட்டானிக் திரைப்படத்திற்கு பிறகு உலகளவில் பெரும் அளவு ரசிகர் பட்டாளத்தை வென்ற திரைப்படம் என்றால் அவதார் திரைப்படம் ஆகும். இந்நிலையில் இதுவரை இப்படத்தின் ஒவ்வொரு பாகங்களாக வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்திய நிலையில், தற்போது இப்படத்தின் அடுத்த பாகத்திற்கான டிரெய்லர் வெளியாகி அவதார் ரசிகர்களை உற்சாகத்தின் உச்சிக்கே கொண்டு சென்று விட்டது.
அவதார் வைரல் டிரெய்லர் :
அதன்படி ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரன்(James Cameron) இயக்கத்தில், வெளியாகி பல்வேறு பதக்கங்கள் மற்றும் வெற்றி வாகை சூடிய அவதார் திரைப்படத்தின் அடுத்த பாகத்தின் டிரெய்லர் வெளியானது. இதுவரை வெளியான அவதார், இரண்டாம் பாகமான அவதார் தி வே ஆஃப் வாட்டர் என தற்பொழுது வெளியாகவுள்ள 3 ஆம் பாகத்திற்கு அவதார் ஃபயர் அன்ட் ஆஷ்(Avatar: Fire and Ash New Trailer) என பெயரிடப்பட்டுள்ள நிலையில் அதன் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க : 'ஜூடோபியா 2' படத்தின் புதிய ட்ரெய்லர் வெளியீடு
முதல் தோற்ற டிரெய்லர் வெளியாகி 15 மணி நேரத்தை கடந்துள்ள நிலையில், தற்போது வரை 4 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது. இதனை அவதார் பட ரசிகர்கள், சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.