Kantara Chapter 1 Box Office Collection Worldwide Total 
சினிமா

Kantara : வசூலில் உச்சம் தொட்ட காந்தாரா சாப்டர் 1! இவ்வளவு கோடியா?

Kantara Chapter 1 Box Office Collection Worldwide: இயக்குநர் ரிஷப்ஷெட்டி இயக்கத்தில் வெளிவந்த காந்தாரா சாப்டர் ஒன் திரைப்படத்தின் வசூல் இவ்வளவா என ஆச்சரியமூட்டும் வகையில், வெளிவந்துள்ள ஒரு நாள் வசூல்.

Bala Murugan

2022 -ல் வெளிவந்த காந்தாரா :

Kantara Chapter 1 Box Office Collection Worldwide : இயக்குநர் மற்றும் நடிகர் ரிஷப்ஷெட்டி இயக்கத்தில் மற்றும் நடிப்பிலும், அஜனீஷ் லோக்நாத் இசையமைப்பில் வெளிவந்த காந்தாரா கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகி மக்களிடையே நல்லதொரு வரவேற்பை பெற்று வசூலையும் வாரி குவித்தது. இந்நிலையில் இதன் அடுத்த பாகத்தை கன்னட மக்கள் மட்டுமல்லாது, இந்தியா மற்றும் உலகளவிலும் இதற்கு ரசிகர் பட்டாளம் படர்ந்த விரிந்து எதிர்பார்த்து காத்திருந்தனர்.

2025-ல் வெளிவந்த காந்தாரா சாப்டர் ஒன் :

இந்நிலையில், நீண்டநாள் எதிர்பார்ப்பிற்கு பிறகு வெளிவர இருந்த காந்தாரா சாப்டர் ஒன் டிரெய்லர் வெளியாகி 12 மில்லியன் பார்வையாளர்களை பெற்றது. டிரெய்லர் வெளியீட்டிற்கு பிறகு படத்தின் எதிர்பார்ப்பு மேலும் உச்சத்தை எட்டியது. இதையடுத்து, அக்டோபர் 2 ஆம் தேதி(Kantara 2 Release Date) வெளியான இந்த திரைப்படத்தின் வசூல் தற்பொழுது வெளியாகியுள்ளது.

காந்தாரா வசூல் :

30 நாடுகளில் அக்டோபர் 2 ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம், குறித்த ஒரு நாள் வசூல் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ஒரே நாளில் 65 கோடி ரூபாய்க்கு மேல் படம் வசூல்(Kantara Chapter 1 Box Office Collection Day 1) செய்துள்ளதாக தகவல் வெளியாகிள்ளது. இதன் வசூல் உண்மை தான் என்று ஆச்சரியப்படும் வகையில், வசூலித்துள்ளதால். தயாரிப்பாளர்கள், நடிகர்கள், இயக்குநர் என் அனைவருக்கும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க : Kantara Review: காந்தாரா சாப்டர் 1 விமர்சனம்! வசூல் இவ்வளவு வருமா?

வசூல் தொடருமா? :

ஒரே நாளில் இத்தனை பெரும் வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ள காந்தார திரைப்படம்(Kantara Box Office Collection). வரும் நாட்களில் வசூல் வேட்டையை தொடரும் என நெட்டிசன்கள் மத்தியில் தகவல் பரவி வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் பெரும் சாதனை படைத்துள்ளது என இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோக்களை வைத்து காந்தாரா ரசிகர்கள் மற்றும் மீம்ஸ் கிரியேட்டர்கள் மீம்ஸ் மற்றும் டெம்ளேட்ஸ்களை தயார் செய்து படம் மற்றும் படம் குறித்த எதிர்பார்ப்புகளை வைரலாக்கி வருகின்றனர்.