Dulquer Salmaan Film Kaantha Movie Box Office Collection Worldwide Day 3 Poster Out News in Tamil Google
சினிமா

3 நாட்களில் காந்தா வசூல் இவ்வளவா? : போஸ்டர் வெளியிட்ட படக்குழு!

Kaantha Movie Box Office Collection Worldwide Day 3 Tamil : துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்துள்ள காந்தா படத்தின் 3 நாள் வசூல் குறித்த அப்டேட் வெளிவந்துள்ளது.

Bala Murugan

துல்கர் சல்மான் வசூல்

Kaantha Movie Box Office Collection Worldwide Day 3 Tamil : மலையாள சினிமா முன்னணி நடிகர்களுள் ஒருவர் துல்கர் சல்மான். இவர் மலையாளம் மட்டுமல்லாது தமிழ் மொழியிலும் ஆர்வம் காட்டி நடித்து வருகிறார். இந்நிலையில், கடைசியாக இவர் நடித்து வெளியான 'லக்கி பாஸ்கர்' படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது.

துல்கர் சல்மானின் கதை தேர்வுகள் சிறந்ததாக இருந்தாலும், சில நேரங்களில் அது தோல்வியை தழுவில் நிலையில் இருக்கும்போது, அதை ஈடுகட்டும் விதமாக அடுத்து படத்தில் கம்பேக் கொடுத்து அசத்திவிடுவார்.

ரசிகர்களிடையே காந்தா படத்தின் எதிர்பார்ப்பு

அந்த வரிசையில் துல்கர் சல்மானின் அடுத்த படமான 'காந்தா' என்ற படம் வெளியாக இருந்தது. இந்த படம் அறிவிப்பு வெளிவந்த நாளில் இருந்தே இவரது ரசிகர்கள் பெருமளவில் காந்தா படத்தை எதிர்நோக்கி காத்திருந்தனர்.

தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரான எம்.கே. தியாகராஜா பாகவதரின் வாழ்க்கை வரலாற்றை கொண்டே இப்படத்தின் முழுக்கதைக்களமும் அமைந்துள்ளது என்றவுடன் இதற்கு துல்கரை தாண்டி மேலும் வரவேற்பு அதிகரித்தது.

காந்தா படக்குழு

செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் உருவான இந்தப்படத்தில் சமுத்திரக்கனி மிஸ்டர் பச்சன் மற்றும் திரைப்பட புகழ் பாக்யஸ்ரீ, துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்து அசத்தியுள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட பன்மொழிகளில் வெளியாகவுள்ளது.

காந்தா படத்தின் 3 நாள் வசூல்

இப்படத்தை வேஃபாரர் பிலிம்ஸ் மற்றும் ராணா ஸ்பிரிட் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. ரசிகர்களின் எதிர்பார்ப்பை சமன் செய்யும் விதமாக இப்படம் கடந்த 14-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில், படம் வெளியாகி 3 நாட்களை கடந்துள்ளதால், திரையரங்குகளில் கூட்டம் ஓரளவிற்கு குவிந்து படத்திற்கு வரவேற்பளித்தாலும், அதன் வணிக வசூல் என்பதே படத்தின் வெற்றிக்கான அடையாளமாக கருதப்படுகிறது.

காந்தா படம் 3 நாட்களில் ரூ.24.50 கோடிக்கு மேல் வசூலித்ததாக படக்குழு(Kaantha Box Office Collection Day 3) போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. படக்குழுவின் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு போஸ்டரை ரசிகர்கள் லைக் செய்து தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.