Grossing ₹200 crore twice in a single year: Actor Suriya is rocking the box office!
திரையரங்குகளில் வசூல் மழை
நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' திரைப்படம் உலகளவில் ரூ. 200 கோடிக்கும் அதிகமாக வசூலித்து மாபெரும் சாதனை படைத்துள்ளது.
கமர்சியல் குடும்பத் திரைப்படமாகவும், அதே வேளையில் உணர்வுப்பூர்வமான கதைக் களத்தைக் கொண்டும் உருவான இப்படத்திற்கு தமிழ் மற்றும் தெலுங்கு மொழி ரசிகர்களிடையே பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.
இதனைத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஒரே ஆண்டில் அடுத்தடுத்து பிரம்மாண்ட ஹிட்
கடந்த மே மாதம் சூர்யா நடிப்பில் வெளியான 'கருப்பு' திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று உலகளவில் ரூ. 340 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.
இரண்டுமுறை ரூ.200 கோடி கடந்து சாதனை
அதைத் தொடர்ந்து தற்போது 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' திரைப்படமும் ரூ. 200 கோடி வசூலைக் கடந்ததன் மூலம், ஒரே ஆண்டில் அடுத்தடுத்து இரண்டு ரூ. 200 கோடி திரைப்படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவில் தனது மார்க்கெட்டைப் பலமாக நிரூபித்துள்ளார் நடிகர் சூர்யா.
ஹாட்ரிக் வெற்றிக்கு காத்திருக்கும் சூர்யா 47
கடந்த சில ஆண்டுகளாகப் பெரிய ஹிட் படங்கள் இல்லாமல் இருந்த சூர்யா, இந்த இரண்டு வெற்றிப் படங்களின் மூலம் மீண்டும் தனது முன்னணி இடத்தை உறுதி செய்துள்ளார்.
நடிகர் சூர்யாவின் 'ஹாட்ரிக்' வெற்றி
இதனைத் தொடர்ந்து வரும் தீபாவளிக்குப் வெளியாகவுள்ள அவரது 47-வது திரைப்படமும் வெற்றியடைந்தால், அவர் இந்த ஆண்டில் தொடர்ச்சியான 'ஹாட்ரிக்' வெற்றியைப் பதிவு செய்வார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.
இதையும் படிங்க : ”ரூ.15,000 தாண்டிய ஒரு கிராம் தங்கம், 10 நாட்களில் சவரனுக்கு ரூ.6,480 அதிகரிப்பு” : வெள்ளி விலையும் புதிய உச்சம்!
=====