”ரூ.15,000 தாண்டிய ஒரு கிராம் தங்கம், 10 நாட்களில் சவரனுக்கு ரூ.6,480 அதிகரிப்பு” : வெள்ளி விலையும் புதிய உச்சம்!

தங்கம் விலை இன்று சவரனுக்கு 640 ரூபாய் அதிகரித்து, ஒரு கிராம் 15 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது.
price of gold increased by ₹640 per sovereign today, with the price per gram crossing the ₹15,000 mark
price of gold increased by ₹640 per sovereign today, with the price per gram crossing the ₹15,000 markAI generated
1 min read

ஏறுமுகத்தில் தங்கம் விலை

ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வருகிறது.

அந்த வகையில் நேற்று முன் தினம் ஆகஸ்ட் 22ஆம் தேதி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,950க்கும், சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,19,600க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலை இன்றும் உயர்வு

தொடர்ந்து இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளதால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

15,000 தாண்டிய கிராம் தங்கம்

22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,030க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,20,240க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் தங்கம் விலை

அதேபோல் 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,800க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,02,400க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் உயர்வு

வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.275க்கும், ஒரு கிலோ ரூ.2,75,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஆகஸ்டு 15 முதல் தங்கம் விலை

ஆகஸ்ட் 24 - ₹15,030

ஆகஸ்ட் 23 - ₹14,950

ஆகஸ்ட் 22 - ₹14,950

ஆகஸ்ட் 21 - ₹14,850

ஆகஸ்ட் 20 - ₹14,600

ஆகஸ்ட் 19 - ₹14,400

ஆகஸ்ட் 18 - ₹14,290

ஆகஸ்ட் 17 - ₹14,270

ஆகஸ்ட் 16 - ₹14,220

ஆகஸ்ட் 15 - ₹14,220 (+20)

ஆகஸ்டு 15 முதல் இன்று வரை சவரனுக்கு ரூ. 6,480 ரூபாய் உயர்ந்து இருக்கிறது.

========================

logo
Thamizh Alai
www.thamizhalai.in