Hombale Films Announced Rishab Shetty's Kantara Chapter 1 Box Office Collection Worldwide Total Crossed Rs 700 Crore Till Now News in Tamil Image Courtesy : Hombale Films
சினிமா

தீபாவளிக்கும் ‘காந்தாரா சாப்டர் 1’ : வசூல் 700 கோடியை தாண்டியது

Kantara Chapter 1 Box Office Collection Worldwide Total : உலகளவில் ‘காந்தாரா: சாப்டர் 1’ திரைப்படம் ரூ.700 கோடி வசூலைக் கடந்து சாதித்து வருவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Kannan

ரிஷப் ஷெட்டியின் காந்தாரா சாப்டர் 1

Kantara Chapter 1 Box Office Collection Worldwide Total : ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்து வெளியான படம் ‘காந்தாரா: சாப்டர் 1’. படம் வெளியான அன்று வசூல் குறைவாக இருந்தாலும், அடுத்தடுத்த நாட்களில் அதிகரிக்க தொடங்கியது. இதனால் படக்குழு உற்சாகமடைந்தது. தற்போது இப்படம் ரூ.700 கோடி வசூலை கடந்திருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

தமிழகத்தில் 68 கோடி வசூல்

தமிழகத்தில் மட்டும் காந்தாரா படம் ரூ.68.5 கோடி வசூலை கடந்து பெரும் சாதனை புரிந்திருக்கிறது. இதனால் இப்படத்தின் விநியோகஸ்தர்கள் உற்சாகம் அடைந்திருக்கிறார்கள். அனைவருக்கும்கொடுத்த பணத்தைத் தாண்டி லாபம் கிடைத்திருப்பது, தீபாவளிக்கு பெரும் உற்சாகத்தை கொடுத் இருக்கிறது. தமிழில் தீபாவளி வெளியீட்டு படங்களைத் தாண்டி பல்வேறு திரையரங்குகளில் இப்போதும் ‘காந்தாரா: சாப்டர் 1’ திரையிடப்பட்டு வருகிறது, மக்கள் வரவேற்பு பெற்று வருகிறது.

கர்நாடகாவிலும் குவியும் வசூல்

ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் ரிஷப் ஷெட்டி, ஜெயராம், ருக்மணி வசந்த் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தார்கள். ஹோம்பாளே நிறுவனம் தயாரிப்பில் வெளியான இப்படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைப்பாளராகவும், அரவிந்த் காஷ்யப் ஒளிப்பதிவாளராகவும், பங்கலான் தயாரிப்பு வடிமைப்பாளராகவும் பணிபுரிந்திருந்தார்கள்.

மேலும் படிக்க : Kantara: காந்தாரா வசூல் இவ்வளவா? உலகளவில் பேசப்படும் ரிஷப் ஷெட்டி!

கர்நாடகாவிலும் குறையாத வசூல்

கர்நாடக மாநிலத்திலும் தீபாவளிக்கு புதிய படங்களின் வரவு இருந்தாலும், காந்தாராவுக்கான மவுசு குறையவில்லை. நான்கு நாள் தொடர் விடுமுறையில் வசூல் குவியும் எனத் தெரிகிறது. இம்மாத இறுதிக்குள் காந்தாரா வசூல் ஆயிரம் கோடியை எட்டிப் பிடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

=================