கவனம் பெறும் ஹாலிவுட் படங்கள் :
Jurassic World Rebirth Box Office Collection in India : ஹாலிவுட் படங்களுக்கு எப்போதும் இந்தியாவில் மவுசு அதிகம். வித்தியாசமான கதைக்களம், நவீன தொழில்நுட்பம், துல்லிய காட்சிகள், இசை இவை ரசிகர்களை வெகுவாக ஈர்க்கின்றன.
வசூலை அள்ளும் ’ஜுராசிக் வேர்ல்ட் - ரீபெர்த்’ :
அந்தவகையில் உலகளவில் பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியான படம்தான், ’ஜுராசிக் வேர்ல்ட் - ரீபெர்த்’(Jurassic World Rebirth Release Date). இந்தியாவில் ஜூலை 4ம் தேதி வெளியானது. இந்தப்படம் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியான இப்படம் இந்தியாவில் மொத்த வசூலில் 100 கோடியை கடந்திருக்கிறது. இதற்குப் பின் வெளியான ‘சூப்பர் மேன்’ திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிராட்பிட்டுக்கு வரவேற்பு அதிகம் :
பிராட்பிட் நடித்த ‘எஃப் 1’ மற்றும் ‘ஜுராசிக் வேர்ல்ட் - ரீபெர்த்(Jurassic World Rebirth)’ ஆகிய படங்கள் இந்தியாவில் நல்ல வசூல் செய்து வருகின்றன. குறிப்பாக ‘எஃப் 1’ திரைப்படம்(F1 Movie) ஐமேக்ஸ் திரையரங்குகளில் தொடர்ச்சியாக ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக திரையிடப்பட்டு வருகிறது. மேலும், இதர மொழிகளில் வெளியான படங்கள் எதுவுமே பெரிய அளவுக்கு வசூலில் வரவேற்பைப் பெறவில்லை.
மேலும் படிக்க : 4 ஆயிரம் கோடி ‘ராமாயணம்’ திரைப்படம் : சாதனை படைக்கும் மகாகாவியம்
ஆகஸ்டு 14ல் ரஜினியின் ’கூலி’ படம் :
தமிழை பொருத்தவரை, ‘மாமன்’ படத்துக்குப் பிறகு எந்தவொரு படமும் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெறவில்லை. அனைத்து திரையரங்க உரிமையாளர்களும், ரஜினிகாந்த் நடிப்பில் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகவுள்ள ‘கூலி’ படத்துக்காக காத்திருக்கிறார்கள். அப்படம் கண்டிப்பாக பெரியளவில் வசூல் இருக்கும் என்பது அனைவருடைய எதிர்பார்ப்பாக உள்ளது.
====