4 ஆயிரம் கோடி ‘ராமாயணம்’ திரைப்படம் : சாதனை படைக்கும் மகாகாவியம்

Ramayana Movie Budget Revealed : இந்தியாவின் மிகச் சிறந்த காவியமான ராமாயணம், 4 ஆயிரம் கோடி செலவில், பிரமாண்ட திரைப்படமாக வெளிவர இருக்கிறது.
Actor Ranbir Kapoor, Yash Film Ramayana Movie Budget Revealed
Actor Ranbir Kapoor, Yash Film Ramayana Movie Budget Revealed
1 min read

இந்தியாவின் இருபெரும் இதிகாசங்கள் :

Ramayana Movie Budget Revealed : இந்தியாவின் தலைசிறந்த காவியங்கள் ராமாயணம், மகாபாரதம். இவற்றை அடிப்படையாக கொண்டு பல்வேறு மொழிகளில் எண்ணற்றை திரைப்படங்கள் வெளிவந்து இருக்கின்றன. இவை அடைந்த வெற்றியையும் அளவிட முடியாது. இதிகாசங்களை கருப்பொருளாக வைத்து எடுக்கப்படும் திரைப்படங்கள் எப்போதும் வெற்றியை அடைந்து வருகின்றன. தொலைக்காட்சி தொடர்களாகவும் இந்த காவியங்கள் சாதனை படைத்து இருக்கின்றன.

4,000 கோடியில் ராமாயணம் :

இந்தநிலையில், ராமாயணத்தை(Ramayana Movie Budget) பிரமாண்டமாக இரண்டு பாகங்களாக திரைப்படமாக எடுக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி இருக்கின்றன. “மிகச் சிறந்த மகாகாவியத்தை உலகம் முழுவதும் பார்க்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்” - ‘ராமாயணம்(Ramayanam)’ திரைப்படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர்.

ராமராக ரன்வீர், சீதையாக சாய் பல்லவி :

இந்திப்பட இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கும் ராமாயணம் படத்தில் ரன்பீர் கபூர்(Ranbir Kapoor) ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும்(Sai Pallavi) நடிக்கின்றனர். 2 பாகங்களாக உருவாகும் இதில், ராவணனாக யாஷ்(Yash) நடிக்கிறார். காஜல் அகர்வால் ராவணன் மனைவி மண்டோதரியாக நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உட்பட பல்வேறு மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது.

ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர் :

மேட் மேக்ஸ்: ஃபியூரி ரோட்(Mad Max Fury Road), தி சூசைட் ஸ்குவாட் உள்பட பல ஹாலிவுட் படங்களில் ஸ்டன்ட் இயக்குநராக பணியாற்றிய கய்நோரிஸ் இதன் சண்டைக் காட்சிகளை அமைக்கிறார்.

இரண்டு பாகங்கள் - தீபாவளி ரிலீஸ் :

ராமாயணம்(Ramayana Part 1 Release Date) படத்தின் முதல் பாகம் 2026ம் ஆண்டு தீபாவளிக்கும் 2ம் பாகம் 2027ம் ஆண்டு தீபாவளிக்கும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இதன் தயாரிப்பாளரான பிரைம் போகஸ் நமித் மல்ஹோத்ரா, இதன் பட்ஜெட் ரூ.4 ஆயிரம் கோடிக்கும்(Ramayana Movie Budget) அதிகம் என்று தெரிவித்துள்ளார். மெகா பட்ஜெட் படம் என்பதால், ஒவ்வொரு விஷயத்திலும் அதிக கவனம் செலுத்துகிறோம். ஹாலிவுட் படங்களின் பட்ஜெட்டுடன் ஒப்பிடும்போது இது அதிகம் இல்லை. மிகச்சிறந்த மகாகாவியத்தை உலகம் முழுவதும் பார்க்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்” என்று அவர் கூறியுள்ளார்.

====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in