துல்கர் சல்மானின் காந்தா திரைப்படம்
Kaantha Movie Review Tamil : துல்கர் சல்மானின் கதைத் தேர்வுகள் எப்போதுமே நம்பிக்கை அளிக்கும் என்றாலும, அவ்வப்போது சில சறுக்கல்கள் இருக்கும். கதைதேர்வில் தோல்வி அடையும், அவர் அதை அடுத்த படத்தில் சரி செய்து கொள்ளும் நேர்த்தியும், யுக்தியும் தெரிந்தவர். இந்நிலையில், இதற்கு முன்பு அவரது நேரடி தமிழ்ப் படமான ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ அவருக்கு தமிழில் ஒரு தனி அந்தஸ்தை பெற்றுத் தந்தது. அதன்பிறகு அவர் மறுபடியும் நடித்திருக்கும் நேரடி தமிழ்ப் படம்தான் துல்கர் சல்மான் மகாதேவன் கதாபாத்திரமாக நடித்திருக்கும் ‘காந்தா’.
காந்தா விமர்சனம்
படத்தின் தொடக்கத்தில்(Kaantha Movie Review in Tamil) ஒரு கொலை நடக்கிறது. கட் செய்தால் மாடர்ன் ஸ்டுடியோஸ் உரிமையாளர் மார்ட்டின் (ரவீந்திர விஜய்), அய்யா என்று அனைவராலும் மதிக்கப்படும் இயக்குநரிடம் (சமுத்திரக்கனி) ஏற்கெனவே படப்பிடிப்பு நடந்து பின்னர் கைவிடப்பட்ட தன் படத்தை மீண்டும் எடுக்கலாம் என்று கூறுகிறார். அந்த காலகட்டத்தில் நடிப்புச் சக்கரவர்த்தி என்று புகழப்படும் உச்ச நட்சத்திரமான டி.கே.மகாதேவனுக்கும் (துல்கர் சல்மான்) அய்யாவுக்கும் இடையே நடந்த ஈகோ மோதலே அப்படம் ட்ராப் ஆன காரணம். மீண்டும் படப்பிடிப்பு தொடங்குகிறது.
காந்தாவின் மையக்கரு
அய்யா எழுதிய காட்சிகளை தன் இஷ்டத்துக்கு மாற்றுகிறார் ஹீரோ மகாதேவன். படத்தின் டைட்டிலையும் ‘காந்தா’ என்று மாற்றச் செய்கிறார். பர்மாவில் இருந்து அகதியாக வந்த பெண்ணான குமாரியை (பாக்யஸ்ரீ போர்ஸ்) தன் மகளை போல வளர்க்கும் அய்யா, அவரையே படத்தின் ஹீரோயின் ஆகவும் ஆக்குகிறார். அய்யாவையும், மகாதேவனையும் மீண்டும் ஒன்றுசேர்க்க முயற்சிக்கும் குமாரி, மகாதேவன் மீது காதலில் விழுந்து விடுகிறார். பின்னர், அய்யாவுக்கும் மகாதேவனுக்கும் இடையிலான மோதலுக்கான காரணம் என்ன? இருவருக்குமான ஈகோ மோதலில் படப்பிடிப்பு முழுமையாக நடந்ததா என்பதே ‘காந்தா’ படத்தின் முக்கிய திரைக்கதையாகும்.
படக்குழுவின் முயற்சி
உலகளவில் இன்றளவும் விண்டேஜ் சினிமா என்றால் பெரும் ரசிகர் பட்டாளமே இருக்கும். அப்படி இந்த காந்தா இயக்கமானது,சென்னை, பரபரப்பான ஸ்டூடியோக்கள், அக்கால சினிமா எடுக்கும் பாணி என பார்த்து பார்த்து செதுக்கி இருக்கிறார்கள். முக்கால்வாசி படமும் ஸ்டூடியோவுக்குள் தான் எடுக்கப்பட்டிருக்கிறது என்றாலும் பார்வையாளர்களுக்கு விஷுவல் பிரம்மாண்டத்தை விருந்தாக தந்துருக்கிறது படக்குழு.
நடிகர்களின் நடிப்பு நேர்த்தி
படத்தின் முதல் பாகம் நம்மை சுவாரசியத்தின் உச்சிக்கு கொண்டு சென்றாலும், டி.கே.மகாதேவனாக துல்கர் சல்மான். எந்தவித குறையும் சொல்லிவிடமுடியாத நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவருக்கு இணையான கதாபாத்திரம் சமுத்திரக்கனி உடையது. தலைக்கனம் கொண்ட அந்த கதாபாத்திரத்தில் தன்னுடைய நிறைவான பங்களிப்பை கொடுத்து அவரும் தனியாக மிளிர்கிறார். பாக்யஸ்ரீ போர்ஸுக்கு இது பேர் சொல்லும் படமாக அமையும். ஆனால் இடைவேளைக்கு ராணா கதாபாத்திரம், நடிப்பு கொஞ்சம் அளவு குறைத்து இருக்கலாம் என்று ஒரு எண்ணம்.
படத்தின் பாடல்கள்
ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை ஓகே ரகம். ஒரு பீரியட் படத்துக்கு இது போதவில்லை என்ற எண்ணம் எழுகிறது. ஜானு சந்தரின் ‘பேசா மொழியே’ பாடலும் அதன் ஆக்கமும் சிறப்பு. மற்ற பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை.
உழைப்பை கொட்டியுள்ள படக்குழு
கலை இயக்குநர் ராமலிங்கத்தின் பணி அளப்பரியது. பழைய சென்னை, ஸ்டுடீயோ, சமுத்திரக்கனியின் வீடு, துல்கரின் வீடு என உழைப்பை கொட்டியிருக்கிறார். குறிப்பிட்டு பாராட்டப்படவேண்டியவர் ஸ்பெயின் ஒளிப்பதிவாளர் டானி சான்செஸ் லோபஸ். இவ்வளவு ‘மிரர் ஷாட்’களை எந்த தமிழ்ப் படத்திலும் பார்த்ததாக நினைவில்லை. அந்த அளவுக்கு தனது தொழில் மீது உள்ள காதலை கொட்டி தீர்த்து இருக்கிறார்.
வணிக வசூல்
ஆகமொத்தம், முதல் பாதியில் இருந்த சுவாரஸ்யத்தை போலவே, இரண்டாம் பாதியிலும் படத்தை சற்ற சிந்தித்து நகர்த்தி இருந்தால், இன்று சிலாகிக்க இடம் இல்லாமல் ஒரு சர்வதேச தரத்திலான ஒரு சினிமாவாக வந்திருக்கும். ஆனால், வின்டேஜ், நடிப்பு , அப்படி,இப்படி என வெளிவந்துள்ள இந்த காந்தாவின் வணிக வசூல் எப்படி இருக்கும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.