Kaithi Malaysian Remake Movie Name Of Banduan Film Official Trailer Release Goes Viral Google
சினிமா

மலாய் மொழியில் வெளியாகும் கைதி திரைப்படம் - வைரலாகும் டிரைலர்!

Kaithi Malaysian Remake Banduan Movie Official Trailer : 2019-ஆம் ஆண்டு வெளியான 'கைதி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து மலாய் மொழியில் கைதி படம் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

Bala Murugan

வெற்றி படம் கைதி

Kaithi Malaysian Remake Banduan Movie Official Trailer : மாநகரம், மாஸ்டர், விக்ரம், கூலி என முண்ணனி நட்சத்திரங்களை வைத்து இயக்கி பல்வேறு வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு தந்து தனக்கென தனி இடத்தை பிடித்தவர் தான் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான 'கைதி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதுவே இவரின் திரைப்பயணத்திற்கு ஒரு பெரிய உறுதியான படிக்காட்டாக அமைந்தது என்றால் மிகையாகாது.

இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது. 'கைதி' திரைப்படம் இந்தியில் 'போலா' என்ற பெயரில் ரீமேக் ஆகி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து, தற்போது மலாய் மொழியில் கைதி படம் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

டிரைலருக்கு நல்ல வரவேற்பு

மலாய் மொழியில் ரீமேக் செய்யப்பட்டுள்ள BANDUAN படத்தின் டீசர் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து, இதன்பின்னர், வெளியான BANDUAN படத்தின் டிரைலர் 80 ஆயிரம் பார்வையாளர்களை கடந்து வருகிறது.

மலேசிய சென்ற கைதி ஒரிஜினல் ஹீரோ கார்த்தி

'கைதி' படத்தின் மலாய் ரீமேக் 'BANDUAN' படத்தை பார்க்க நடிகர் கார்த்தி மலேசியா(Karthi Malaysia Visit) சென்றுள்ளார். திரையரங்குகளில் நவ.6 ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் சிறப்புத் திரையிடல் நிகழ்வு இன்று நடைபெறுகிறது. எனவே, BANDUAN படத்தின் கதாநாயகனும் கைதி படத்தின் ஒரிஜினல் ஹீரோவான கார்த்தியும் சந்தித்து பேசி புகைப்படம் எடுத்துக்கொண்டனர். தமிழ், இந்தியை தொடர்ந்து தற்போது மலாய் மொழியில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகும் இப்படத்தின் வரவேற்பு எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.