அவார்களை குவிக்கும் மலையாள படங்கள் :
Lokah Movie Box Office Collection Worldwide in Tamil : தென்னிந்திய அளவில் தேசிய விருதுகளை வாங்கும் படங்களை மலையாள திரையுலகம் வெளியிட்டு அசத்துவது வழக்கம். குறைந்த பட்ஜெட்டில் மலையாளத்தில் எடுக்கப்படும் படங்கள் இந்திய அளவில் பேசப்படும்.
வசூலில் உச்சம் தொடும் ‘லோகா’
Lokah Malayalam Movie Collection : மலையாள திரையுலகை பொருத்தவரை இதுவரை அதிக வசூல் செய்த படங்கள் வரிசையில் ‘எம்புரான்’, ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ மற்றும் ‘துடரும்’ ஆகிய படங்கள் முதல் மூன்று இடங்களில் இருக்கின்றன. இந்தப் படங்கள் ரூ.200 கோடி வசூலைத் தாண்டியவை. தற்போது ‘லோகா’ படமும் ரூ.200 கோடி வசூலை கடந்திருக்கிறது. வசூலில் ‘துடரும்’ மற்றும் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ வசூலை முறியடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய சாதனையை நோக்கி ‘லோகா’ திரைப்படம்
அதேசமயம் ‘எம்புரான்’ வசூலை முறியடிக்குமா என்பது கேள்விக்குறிதான். வர்த்தக நிபுணர்கள் சிலர் கண்டிப்பாக முறியடிக்கும் என்று ஆருடம் கூறுகிறார்கள். காரணம் மலையாளத்தில் இன்னும் சில வாரங்களுக்கு பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் ரிலீசாக வாய்ப்பு இல்லை. எனவே, ’லோகா’ உற்சாகத்துடன் காத்துக் கிடக்கின்றனர். மேலும் 2ம் பாகத்திற்கான பணிகளையும் விரைவில் தொடங்க முடிவு செய்துள்ளனர்.
உலகளவில் ரூ.202 கோடி வசூல்
துல்கர் சல்மான் தயாரிப்பில் வெளியான படம் ‘லோகா சாப்டர் 1 சந்திரா’(Lokah Chapter 1: Chandra). இதில் கல்யாணி பிரியதர்ஷன் சூப்பர் ஹீரோவாக நடித்திருக்கிறார். ‘பிரேமலு’ நஸ்லன், சாண்டி, சந்து சலீம் குமார், அருண் குரியன், சாந்தி பாலச்சந்திரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். டாமினிக் அருண் இயக்கியிருந்த(Lokah Movie Director) இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக நிமிஷ் ரவி, இசையமைப்பாளராக ஜேக்ஸ் பீஜாய் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.
மேலும் படிக்க : 23 நாளில் 510 கோடி வசூலித்த ‘கூலி’ : செப்.11ம் தேதி OTTல் ரிலீஸ்
லோகா திரைப்படம் உலக அளவில் இன்று வரை 202 கோடி வசூலித்து(Lokah Collection Worldwide Till Now) இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 30 கோடி பட்ஜெட்டில்(Lokah Movie Budget) இந்தப் படம் தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
===========