23 நாளில் 510 கோடி வசூலித்த ‘கூலி’ : செப்.11ம் தேதி OTTல் ரிலீஸ்

Coolie Movie Collection OTT Release Date in Tamil : நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம், ஓடிடியில் வரும் 11ம் தேதி வெளியாகிறது.
Coolie Movie Collection OTT Release Date in Tamil
Coolie Movie Collection OTT Release Date in Tamil
1 min read

ரஜினி நடித்த கூலி :

Coolie Movie Collection OTT Release Date in Tamil : சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 171வது படம் கூலி. இயக்குநர் லோகேஷ் கனகராஜை அழைத்து தனக்கு ஒரு கதை சொல்லுமாறு கேட்டு அதை ஓகே செய்து நடித்த படம்தான் கூலி. ஆகஸ்ட் 14ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசான(Coolie Release Date) இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், முதல் சில நாட்கள் வசூலில் பிரமாண்டத்தை காட்டியது. தேவா எனும் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்து இருந்தார்.

கூலி படம் ரூ.510 கோடி வசூல் :

கூலி படம் திரைக்கு வந்த 23 நாட்களில் உலக அளவில் ரூ. 510 கோடி வசூல் செய்திருக்கிறது(Coolie Movie Collection Total). வெளியாகி ஒரு மாதம் முடிவதற்கு முன்பே அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வருகிறது கூலி திரைப்படம்.

ஓடிடி தளத்தில் கூலி திரைப்படம் :

செப்டம்பர் 11ம் தேதி முதல் கூலி படத்தை அமேசான் பிரைமில் பார்த்து ரசிக்கலாம்(Coolie OTT Release Date in Amazon Prime). தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் பார்க்கலாம். இந்தியில் எப்பொழுது வரும் என்பது மட்டும் அறிவிக்கப்படவில்லை. தேவா, சைமன் இடையேயான மோதலை ஓடிடியிலும் பார்த்து ரசிக்க ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

மேலும் படிக்க : 500 கோடியை எட்டிய ‘கூலி’ திரைப்படம் : ரஜினிகாந்த் புதிய சாதனை

நாகார்ஜுனா, சௌபின் ஷாஹிர், உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் என நட்சத்திர பட்டாளமே இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். பாலிவுட் நடிகர் அமீர் கான் சிறப்புத் தோற்றத்தில் வந்தார். ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வசூலாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது நிறைவேறா விட்டாலும், ரஜினியின் கூலி வெற்றிப் படம் தான் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க : "கூலி படத்துக்கு U\A சான்று” கிடையாது : உயர் நீதிமன்றம் அதிரடி

====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in