Mohanlal and Venkatesh in Ajith Kumar's 'Daredevil'? New report spreads like wildfire!
'குட் பேட் அக்லி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் அஜித் குமார் மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளது உறுதி செய்யப்பட்டது.
ஆனால், அப்படத்தின் ரிலீசுக்குப் பிறகு சுமார் ஒன்றரை ஆண்டுகளாக அஜித்தின் 64-வது படம் குறித்த எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது.
படத்தின் தலைப்பு மற்றும் தயாரிப்பாளர்
ரசிகர்களின் நீண்ட மாத காத்திருப்புக்குப் பிறகு, இத்திரைப்படத்திற்கு 'டேர் டெவில்' (Dare Devil) எனப் பெயரிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தயாரிப்பாளராக நடிகை ஷாலினி
இப்படத்தை 'பிரேவ் ஹார்ட்ஸ் புரடக்ஷன்ஸ்' (Brave Hearts Productions) என்ற புதிய நிறுவனத்தின் பெயரில் அஜித் குமாரின் மனைவியும் நடிகையுமான ஷாலினி அஜித் குமார் தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இத்திரைப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.
பான்-இந்திய ஸ்டார்களின் சிறப்புத் தோற்றம்?
தற்போது வெளியாகியுள்ள புதிய தகவலின்படி, இத்திரைப்படத்தில் முன்னணி நடிகர்களான மோகன்லால் மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஏற்கனவே ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' மற்றும் 'ஜெயிலர் 2' திரைப்படங்களில் மோகன்லால் சிறப்புத் தோற்றத்தில் நடித்து அசத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
Dare Devil படப்பிடிப்பு எப்போது?
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் அஜித்குமாரின் 'டேர் டெவில்' திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் துவங்கும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: இந்தியத் திரையுலகின் 'உலகநாயகன்' : கமல்ஹாசனின் 66 ஆண்டுகால பொன்னான திரைப்பயணம் - சிறப்பு வீடியோ வெளியீடு!
======