Mookuthi Amman 2  source:thamizhalai,google
சினிமா

‘மூக்குத்தி அம்மன் 2’ டீசர் வெளியீடு : படம் ரிலீஸ் எப்போது தெரியுமா?

Mookuthi Amman 2 Release Date: நயன்தாரா நடித்துள்ள 'மூக்குத்தி அம்மன் 2' படத்தின் 'ரைஸ் ஆஃப் மஹாசக்தி' டீசர் வெளியானது.

Kavitha prasanna

The 'Rise of Mahasakthi' teaser for the film 'Mookuthi Amman 2', starring Nayanthara, has been released.

இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில், நடிகை நயன்தாரா அம்மன் வேடத்தில் நடித்துள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தின் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

இணைந்து தயாரிக்கும் வேல்ஸ் மற்றும் ரௌடி பிக்சர்ஸ்

இத்திரைப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளன.

முன்னதாக இயக்குநர் மாற்றம்

முன்னதாக, ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக, இந்த இரண்டாம் பாகத்தை சுந்தர் சி இயக்கியுள்ளார்.

நட்சத்திரப் பட்டாளம்

இப்படத்தில் நயன்தாராவுடன் இணைந்து சினேகா, யோகிபாபு, ரெஜினா கசண்ட்ரா, ஊர்வசி, அபினயா, இனியா, மைனா நந்தினி, துனியா விஜய், ராமச்சந்திர ராஜு, அஜய் கோஷ், சிங்கம்புலி, விச்சு விஸ்வநாத் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

'ரைஸ் ஆஃப் மஹாசக்தி' டீசர் மற்றும் ரிலீஸ் தேதி

தற்போது ‘ரைஸ் ஆஃப் மஹாசக்தி’ என்ற பெயரில் இப்படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மேலும், நவம்பர் 8-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், தீபாவளி வெளியீடாக நவம்பர் 6-ஆம் தேதியே ‘மூக்குத்தி அம்மன் 2’ திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பான்-இந்தியா திரைப்படமாக உருவாகும் மூக்குத்தி அம்மன் 2

இத்திரைப்படம் தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம், மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் பான்-இந்தியா திரைப்படமாக வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கேரளம் திரையுலக வரலாற்றில் அதிக வசூல் செய்த திரைப்படம்: 'பெத்லஹேம் குடும்ப யூனிட்' சாதனை!

=====