

நிவின் பாலி மற்றும் மமிதா பைஜூ கூட்டணியில் வெளியான ‘பெத்லஹேம் குடும்ப யூனிட்’ திரைப்படம், மலையாளத் திரையுலக வரலாற்றிலேயே அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது.
இதற்கு முன் முதலிடத்தில் இருந்த ‘லோகா: சாப்டர் 1’ படத்தின் வசூல் சாதனையைத் தகர்த்து, இப்படம் இந்த புதிய சாதனையைப் படைத்துள்ளது.
உலக அளவில் ரூ.309 கோடி வசூலித்து சாதனை
‘பெத்லஹேம் குடும்ப யூனிட்’ திரையரங்குகளில் வெளியான 24-வது நாட்களிலேயே இந்திய அலவில் மொத்த வசூல் ரூ.166.49 கோடியைக் கடந்தது.
இத்திரைப்படத்திற்கான உலகளாவிய வசூல் தற்போது ரூ.309.05 கோடியைத் தொட்டுள்ளது. முன்னதாக முதலிடத்தில் இருந்த 'லோகா: சாப்டர் 1’ திரைப்படம் உலகளவில் ரூ.303.86 கோடி வசூலித்து சாதனை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அதிவேகமாக ரூ.100 மற்றும் 200 கோடி கடந்து சாதனை
இயக்குநர் கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் உருவான இத்திரைப்படம், திரையரங்குகளில் வெளியான 5 நாட்களிலேயே உலகளவில் ரூ.100 கோடியையும், 12 நாட்களிலேயே ரூ.200 கோடியையும் கடந்து அதிவேகமாக வசூல் குவித்தது.
கேரளம் பாக்ஸ் ஆபீஸில் அதிவேக வளர்ச்சி
கேரளத்தில் மட்டும் ரூ.132.45 கோடியைக் கடந்து அதிக வசூல் செய்த படமாகத் திகழும் 'பெத்லஹேம் குடும்ப யூனிட்', வெளிநாடுகளிலும் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்து அசத்தியுள்ளது.
4-வது வார இறுதியில் பாக்ஸ் ஆபீஸில் 54% கூடுதல் வசூல் வளர்ச்சியைப் பதிவு செய்து, திரையரங்குகளில் தனது வெற்றிகரமான வசூல் வேட்டையைத் தொடர்ந்து தக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : துல்கர் சல்மானுடன் இனி இணைந்து நடிக்க மாட்டேன்: காரணம் இதுதான்... : மனம் திறந்த ஐஸ்வர்யா லட்சுமி!
=====