'Ram and Leela' starring Rio Raj: Official release date announced!
நடிகர் ரியோ ராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'ராம் அண்ட் லீலா' திரைப்படத்தின் திரையரங்க வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
படத்தின் தயாரிப்பு விவரங்கள், படக்குழு
இத்திரைப்படத்தை அறிமுக இயக்குநர் ராமச்சந்திரன் கண்ணன் இயக்கும் இப்படத்தில் ரியோ ராஜிற்கு ஜோடியாக அறிமுக நாயகி வர்திகா நடித்திருக்கிறார்.
இசையும், தயாரிப்பும்
மேலும் இசையமைப்பாளர் அங்கித் மேனன் இசையமைத்துள்ள இத்திரைப்படத்தை டிரைடண்ட் ஆர்ட்ஸ் (Trident Arts) நிறுவனத்தின் சார்பில் ஆர்.ரவீந்திரன் மற்றும் சுதர்சன் ஆகியோர் தயாரித்துள்ளனர்.
வெளியீட்டுத் தேதி மற்றும் ஓடிடி உரிமம்
'ராம் அண்ட் லீலா' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 21-ஆம் தேதி உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
டிஜிட்டல் ஓடிடி உரிமை
மேலும் 'ராம் அண்ட் லீலா' திரைப்படத்தின் டிஜிட்டல் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் (Amazon Prime) நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரசிகர்களின் அதீத எதிர்பார்ப்பு
முன்னதாக ரியோ ராஜ் நடிப்பில் வெளியான 'ஜோ' மற்றும் 'ஆண்பாவம் பொல்லாதது' ஆகிய திரைப்படங்கள் வணிக ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, தற்போது 'ராம் அண்ட் லீலா' திரைப்படத்தின் மீதும் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இதையும் படிங்க: சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு 'மூடர் கூடம் 2': ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் இயக்குநர் நவீன்!
=====