சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு 'மூடர் கூடம் 2': ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் இயக்குநர் நவீன்!

மூடர் கூடம் 2 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு: இயக்குநர் நவீனின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
'Moodar Koodam 2' after nearly 13 years: Director Naveen releases the first-look poster
'Moodar Koodam 2' after nearly 13 years: Director Naveen releases the first-look postergoogle
1 min read

'Moodar Koodam 2' after nearly 13 years: Director Naveen releases the first-look poster!

கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற 'மூடர் கூடம்' திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் நவீன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

படத்தின் தயாரிப்பு மற்றும் நடிகர்கள் விவரம்

'கிராண்டல் பிக்சர்ஸ்' (Grandall Pictures) தயாரிப்பு நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரிக்கிறது.

மூடர் கூடம் இண்டாம் பாகத்தில் செண்ட்ராயன், ஓவியா, ராஜ் மாணிக்கம், சூராஜ் நல்லுசாமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இயக்குநர் நவீனின் திரைப்பயணம்

2013-ல் வெளியான 'மூடர் கூடம்' திரைப்படத்தின் மூலம் நவீன் நடிகராகவும், தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.

இப்படத்தைத் தொடர்ந்து 'கொளஞ்சி' திரைப்படத்திற்கு கதை, வசனம் எழுதிய அவர், நடிகர் விஜய் ஆண்டனியை வைத்து 'அக்னிச் சிறகுகள்' என்ற திரைப்படத்தையும் இயக்கியுள்ளார்.

தெலுங்கில் இயக்குநர் நவீன்?

தெலுங்கு திரையுலகில் நடிகர் நாகார்ஜுனாவின் 100-வது படத்தை இவர் இயக்குவதாக இருந்தது; ஆனால், சில தயாரிப்பு சிக்கல்கள் காரணமாக அந்த திரைப்படம் கைவிடப்பட்டது.

13 ஆண்டுகளுக்குப் பிறகு மூடர் கூடம்-2

சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு 'மூடர் கூடம் 2' குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி திரை ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது அத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் நவீன் வெளியிட்டுள்ளார்.

மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

முதலாம் பாகத்தின் நகைச்சுவைக் காட்சிகள் இன்றும் சமூக வலைதளங்களில் பலராலும் ரசிக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் இரண்டாம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

=====

logo
Thamizh Alai
www.thamizhalai.in