'Ramayana' trailer to be released tomorrow during the auspicious Brahma Muhurtham:Film team makes official announcement! google
சினிமா

நாளை பிரம்ம முகூர்த்தத்தில் ரிலீசாகும் ’ராமாயணா’ ட்ரெய்லர் : படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி நடிக்கும் 'ராமாயணா' பட ட்ரெய்லர் ஜூலை 30 அதிகாலை 4:15 மணிக்கு பிரம்ம முகூர்த்தத்தில் வெளியாகிறது.

Kavitha prasanna

The trailer for the film 'Ramayana', directed by Nitesh Tiwari and starring Ranbir Kapoor and Sai Pallavi, is set to be released on July 30 at 4:15 AM—during the auspicious Brahma Muhurtham.

பிரம்மாண்டமாக உருவாகும் ’ராமாயணா’

இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ராமாயணா’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டுத் தேதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

உலகளவில் வெளியீடு

அதன்படி, வரும் ஜூலை 30-ஆம் தேதி அதிகாலை 4:15 மணிக்கு பிரம்ம முகூர்த்தத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் உலகளவில் வெளியாகவுள்ளது.

ட்ரெய்லர் தேதியில் மாற்றம்

முன்னதாக, இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் ஜூலை 24-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், சர்வதேச அளவில் திரைப்படத்தை விநியோகம் செய்வதற்காக 'சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட்' நிறுவனத்துடன் படக்குழு ஒப்பந்தம் மேற்கொண்டதால், திட்டமிட்ட தேதியில் ட்ரெய்லர் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது.

தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தற்போது புதிய வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ள தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா, நாளை மங்களகரமான பிரம்ம முகூர்த்த நேரத்தில் அதிகாலை 4:15 மணிக்கு 'ராமாயணா' ட்ரெய்லருடன் ஒரு புதிய விடியலை உலகளவில் வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.

அவதார கதாப்பாத்திரங்களில் மிளிரும் நட்சத்திரங்கள்

இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த காவிய திரைப்படத்தில் ராமராக ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும், ராவணனாக கேஜிஎஃப் புகழ் யஷும் நடிக்கின்றனர்.

இசைக்கூட்டணியில் புதிய முயற்சி

உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணி இணைந்து இப்படத்திற்கு இசையமைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: "ரூ.6,170 கோடி வசூல்" : பாக்ஸ் ஆபிஸை திணறடிக்கும் கிறிஸ்டோபர் நோலனின் 'தி ஒடிசி' : இந்தியாவிலும் அள்ளும் கலெக்சன்...!

=====