

கிறிஸ்டோபர் நோலனின் 'தி ஒடிசி'
ஹோமர் எழுதிய புகழ்பெற்ற கிரேக்க இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படத்தினை நோலன் உருவாக்கினார். உலகெங்கும் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கிய இந்த திரைப்படம் ஜூலை 17ஆம் தேதியன்று வெளியானது.
தியேட்டர்கள் ஹவுஸ்புல்
10 நாட்களைக் கடந்தும் இதன் வசூல் வேகம் இன்னும் குறையவில்லை. அரங்கம் நிறைந்த காட்சிகளாக சக்கைப்போடு போடுகிறது.
தொடர்ச்சியான வசூல் வேட்டையை தி ஒடிசி திரைப்படம் நடத்தி வருகிறது.
பாக்ஸ் ஆபீஸ் சாதனை
இதன் காரணமாக, சர்வதேச பாக்ஸ் ஆபிஸில் கடந்து சாதனைப் படைத்து வருகிறது. இந்த திரைப்படத்தின் வெற்றி, கிறிஸ்டோபர் நோலனின் முந்தைய படங்களின் வசூல் சாதனைகளை முறியடித்து வருகிறது.
250 மில்லியன் டாலர் திரைப்படம்
தி ஒடிசி திரைப்படம் 250 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் உருவாகியது. மேலும் இந்த திரைப்படம் ஹாலிவுட்டில் அதிக பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட படமாகவும் உள்ளது.
முன்னணி நட்சத்திரங்கள்
ஹாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களான மாட் டாமன், ஆன் ஹாத்வே, ராபர்ட் பாட்டின்சன், டாம் ஹொலாந்து உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
உலகளவில் ரூ.6,170 கோடி வசூல்
உலகளவில் இப்படம் முதல் 10 நாட்களில் 639 மில்லியன் டாலர் வசூலை எட்டியுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் ₹6170 கோடிக்கும் அதிகமாகும்.
தி ஒடிசி படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பு, திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பு நிறுவனமான யூனிவர்சல் பிக்சர்ஸுக்கு மிகப்பெரிய லாபத்தை ஈட்டித் தந்துள்ளது.
இந்தியாவில் அள்ளும் வசூல்
கிறிஸ்டோபர் நோலன் திரைப்படங்களுக்கு இந்தியாவில் எப்போதும் நல்ல வரவேற்பு உண்டு. அந்த வரவேற்பு தி ஒடிசி திரைப்படத்திற்கும் பெரிய அளவில் கிடைத்துள்ளது.
இந்தியாவில் மட்டுமே, இப்படம் இதுவரை ₹140 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளது.
இந்த திரைப்படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியிடப்பட்டு உள்ளூர் ரசிகர்களின் வரவேற்பினை பெற்றுள்ளது.
பிற நாடுகளில் வசூல் விவரம்
பிரிட்டன் மற்றும் அயர்லாந்து பகுதிகளில் ₹444 கோடி, பிரான்ஸ் நாட்டில் ₹305 கோடி, இத்தாலியில் ₹277 கோடி, ஆஸ்திரேலியாவில் ₹198கோடி, ஜெர்மனியில் ₹196 கோடி, மெக்சிகோவில் ₹182 கோடி, ஸ்பெயின் நாட்டில் ₹148 கோடி, பிரேசிலில் ₹106 கோடி என்று வேட்டையை நடத்தி வருகிறது தி ஒடிசி.
ஐமேகேஸ் தியேட்டர்களில் குவியும் கூட்டம்
தி ஒடிசியின் ஒரிஜினல் ஆங்கிலப் பதிப்பிற்கு ஐமேக்ஸ் (IMAX) திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதுகிறது. வார இறுதி நாட்களில் இதற்கு டிக்கெட் கிடைப்பதே அரிதாகி விட்டது.
இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் மீதான மதிப்பு , அவரது திரைப்படங்களில் இருக்கும் அறிவியல் மற்றும் நம்பகத்தன்மைமிக்க கிராபிக்ஸ் காட்சிகள் ஆகியவை ரசிகர்களைத் தொடர்ந்து திரையரங்குகளை நோக்கி ஈர்த்து வருகிறது.
தி ஒடிசி திரைப்படம் நேர்த்தியான தொழில்நுட்ப வல்லுநர்கள் மூலம் , முழுவதுமாக ஐமேக்ஸ் கேமராக்களால் மட்டுமே படமாக்கப்பட்டுள்ளது. இதனால்,இந்த திரைப்படத்தை ஐமேக்ஸ் திரையரங்குகளில் காணும் போது, ரசிகர்களின் கண்களுக்கு பெரிய விருந்தாக அமைகிறது.
புதுமையான அனுபவம், ரசிகர்கள் உற்சாகம்
அதேபோல் படத்தின் கதை பல நூற்றாண்டுகளாக உலகப் புகழ் பெற்ற காவியமாக இருப்பதால் , அதை திரையில் காணும் புதுமையான அனுபவம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
================