Release date announced for the late director Bharathiraja's final film, 'Pulavar'!
மறைந்த இயக்குநர் பாரதிராஜா கதாநாயகனாக நடித்துள்ள கடைசி திரைப்படமான 'புலவர்' செப்டம்பர் 25-ம் தேதி வெளியாகிறது.
திரையுலகின் இழப்பும் அஞ்சலியும்
தமிழ் மற்றும் இந்தியத் திரையுலகில் தவிர்க்க முடியாத முன்னணி இயக்குநர்களில் ஒருவரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா, கடந்த ஜூன் 10-ம் தேதி வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார்.
சென்னை நீலாங்கரையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள், ரசிகர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இயக்குநர் இமயத்திற்கு அரசு மரியாதை
தொடர்ந்து, அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள கார்ட்டரோடு தோப்பில் அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெற்றது.
கடைசி திரைப்படத்தின் வெளியீட்டு அறிவிப்பு
இந்நிலையில் மறைந்த பாரதிராஜா கதாநாயகனாக நடித்த அவரது கடைசி திரைப்படமான 'புலவர்', வரும் செப்டம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
'மெய்யாண்டவர்' கதாப்பாத்திரத்தில் பாரதிராஜா
இப்படத்தில் ஓய்வுபெற்ற காவல் அதிகாரியான 'மெய்யாண்டவர்' என்ற முக்கியக் கதாபாத்திரத்தில் பாரதிராஜா நடித்துள்ளார். மேலும், குணச்சித்திர கதாப்பாத்திரங்களுக்கு உயிர்க்கொடுக்கும் ரேச்சல் ரேபேக்கா உள்ளிட்டோர் பிற முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
’புலவர்’ திரைப்படத்தின் பின்னணி
இத்திரைப்படத்தை புதுமுக இயக்குநர் முருகய்யா இயக்கியுள்ளார். ஒரு கொலை வழக்கைக் கண்டுபிடிக்கும் பின்னணியில் முழுக்க முழுக்க நகைச்சுவை மற்றும் புலனாய்வு பாணியில் உருவாகியுள்ள இத்திரைப்படம், இயக்குநர் இமயம் பாரதிராஜா நடித்த கடைசி திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மட்டுமின்றி திரைத்துரையினர் மத்தியிலும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : ”முதல்வர் பேச்சை நீக்க சபாநாயகர் மறுப்பு” : திமுகவினர் அமளி, தரையில் அமர்ந்து தர்ணா : அவையில் இருந்து வெளியேற்றம்..!
====