Sivaji Ganesan Family Actors: Dharshan Kanesan Debuts in Tamil Cinema
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடிப்புப் பயணம்
தமிழ்த் திரையுலகத்தில் தனது நடிப்பின் மூலம் நீங்காத இடத்தைப் பிடித்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அவர் மறைந்தாலும் அவரது படங்களும் நடிப்பும் இன்றைய தலைமுறையினருக்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.
பிரபு மற்றும் ராம்குமாரின் திரைப்பயணம்
சிவாஜி கணேசனின் இளைய மகன் பிரபு, 1982-ல் "சங்கிலி" என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி, பல படங்களில் கதாநாயகனாகவும் தற்போது குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். அதேபோல் பிரபுவின் அண்ணன் ராம்குமார் 1988-ல் "அறுவடை நாள்" படத்தின் மூலம் அறிமுகமானார்.
அடுத்த தலைமுறை நடிகர்கள்: துஷ்யந்த் & விக்ரம் பிரபு
ராம்குமாரின் மூத்த மகன் துஷ்யந்த் 2003-ல் "சக்சஸ்" என்ற திரைப்படம் மூலமும், பிரபுவின் மகன் விக்ரம் பிரபு 2012-ல் "கும்கி" திரைப்படம் மூலமும் கதாநாயகர்களாக அறிமுகமாகினர்.
இவர்களில் பிரபுவின் மகன் விகரம் பிரபு உச்ச நட்சத்திரமாக தமிழ்த் திரையிலகில் தற்போது வரை மிளிர்ந்து வருகிறார். அதுமட்டுமின்றி விக்ரம் பிரபுவின் 25வது திரைப்படமான "சிறை" நல்ல வரவேற்பைப் பெற்றது.
சிவாஜி கணேசன் முதல் புதிய வரவு தர்ஷன் கணேசன் வரை
ராம்குமாரின் மற்றொரு மகன் சிவாஜி தேவ் 2008-ல் "சிங்கக்குட்டி" படத்தின் மூலம் அறிமுகமானார். இந்நிலையில், ராம்குமாரின் இளைய மகன் தர்ஷன் கணேசன் "லெனின் பாண்டியன்" திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார்.
இதன் மூலம் சிவாஜி குடும்பத்திலிருந்து திரையுலகிற்கு வரும் 6வது நடிகர் என்ற பெருமையை இவர் பெறுகிறார்.
இதையும் படிங்க: ”தவெக 19.81 கோடி, திமுக 197.84 கோடி, அதிமுக 112.39 கோடி : 2026 தேர்தலுக்கு செலவு : வாக்காளர்களுக்கு பணமே கொடுக்காத TVK!
=======