”தவெக 19.81 கோடி, திமுக 197.84 கோடி, அதிமுக 112.39 கோடி : 2026 தேர்தலுக்கு செலவு : வாக்காளர்களுக்கு பணமே கொடுக்காத TVK!

சட்டமன்ற தேர்தலில் தவெக ரூ.19.81 கோடி செலவழிச்சு இருக்கிறதா செலவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
The expenditure report states that TVK spent ₹19.81 crore on the assembly election
The expenditure report states that TVK spent ₹19.81 crore on the assembly electionsource:thamizhalai,ai generated
1 min read

தமிழக சட்டமன்ற தேர்தல்

ஏப்ரல் மாதம் தமிழக சட்டமன்றத்திற்கு தேர்தல் நடந்து முடிந்தது. இதில் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் என நான்கு முனைப்போட்டி நிலவியது.

108 இடங்களில் வெற்றி பெற்ற தவெக, விஜய் தலைமையில் ஆட்சியை பிடித்தது.

திமுக, அதிமுக செலவுக் கணக்கு

2026 தேர்தலில் திமுக ரூ.197.84 கோடியும், அதிமுக ரூ.112.39 கோடியும் செலவிட்டுள்ளதாக தகவல் வெளியான சூழலில் தற்போது தவெக தேர்தல் செலவும் வெளியாகியிருக்கிறது. அதிமுகவும், திமுகவும் அதிகபட்ச தொகையை செலவழித்து இருக்கின்றன.

விஜயின் விமானப் பயணம் - ரூ.3.55 கோடி

தேர்தல் ஆணையத்திடம் தவெக தாக்கல் செய்துள்ள செலவு விவரங்களின்படி, அக்கட்சியின் முதல்வர் வேட்பாளராக இருந்த ஜோசப் விஜயின் விமானப் பயணத்திற்காக ரூ.3.55 கோடி செலவிடப்பட்டுள்ளது.

மேலும், விஜய் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி ஆகிய இரண்டு தொகுதிகளுக்காக ரூ.40 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பிரசாரம் ரூ.19.4 கோடி செலவு

கட்சியின் பொருளாளர் பி.வெங்கடரமணன் கையெழுத்திட்டுள்ள இந்த அதிகாரபூர்வ செலவு அறிக்கையில், பொதுத் தேர்தல் பிரச்சாரத்திற்காக கட்சியின் தலைமை அலுவலகம் ரூ.19.4 கோடி செலவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேட்பாளர்களுக்கான செலவு இல்லை ?

தவெக தாக்கல் செய்துள்ள இந்த அறிக்கையில், கட்சி வேட்பாளர்களுக்காக எந்தவித தேர்தல் செலவும் மேற்கொள்ளப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால், வேட்பாளர்களே தங்களது பிரச்சாரச் செலவுகளை ஏற்றுக்கொண்டிருக்கலாம் என அந்த அறிக்கை மூலம் தெளிவாகிறது.

விளம்பரத்திற்காக ரூ.6.35 கோடி

தவெகவின் பொதுப் பிரச்சார செலவுகளில் அதிகபட்சமாக ரூ.6.35 கோடி ஊடக விளம்பரங்களுக்காக செலவிடப்பட்டுள்ளது. இதில் அச்சு ஊடகம், மின்னணு ஊடகம் மற்றும் வானொலி உள்ளிட்ட விளம்பரங்கள் இடம்பெற்றுள்ளன.

ஆதவ் அர்ஜுனா நிறுவனத்திற்கு ரூ.1.79 கோடி

மேலும், Aadhav Arjuna-வின்Voice of Common Strategic Consulting Private Limited நிறுவனத்திற்கு ரூ.1.79 கோடி செலுத்தப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுக் கூட்டங்களுக்கு ரூ.50.55 லட்சம்

பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்களுக்காக ரூ.2.06 கோடியும், விளம்பரப் பொருட்களுக்காக ரூ.40.55 லட்சமும் செலவிடப்பட்டுள்ளது. ‘Books’ என பட்டியலிடப்பட்டுள்ள விளம்பரப் பொருட்களும் இதில் அடங்கும்.

பிரச்சாரத்திற்கான பிற செலவுகளாக ரூ.7.04 கோடி குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், வேட்பாளர் விஜய்க்கு ரூ.40 லட்சம் வழங்கப்பட்டதாகவும் செலவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் கால வருவாய் ரூ.7.02 கோடி

தேர்தல் காலத்தில் அனைத்து வழிகளிலும் கிடைத்த வருவாய் ரூ.7.02 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்ட நேரத்தில் கட்சியின் தொடக்க கையிருப்பாக ரூ.3.03 கோடி இருந்ததாகவும் அறிக்கை கூறுகிறது.

தேர்தல் ஆணையம் செப்டம்பர் 10ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தை மாநிலக் கட்சியாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது

=============

logo
Thamizh Alai
www.thamizhalai.in