Varanasi Movie Updates Director S S Rajamouli Actor Mahesh Babu Collaboration Varanasi Title Launch Event 2025 Teaser Latest News in Tamil google
சினிமா

Varanasi Movie: மகேஷ் பாபு- ராஜமௌலி துவக்கம்: வாரணாசியின் அப்டேட்!

Varanasi Movie Updates in Tamil : ராஜமௌலியின் அடுத்த படமாக மகேஷ் பாபு நடிக்கும் டீசர் வெளியான நிலையில், இப்படத்திற்கான தலைப்பு வெளியீட்டு விழாவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

Bala Murugan

இயக்குநர் ராஜமௌலி பிரம்மாண்டம்

Varanasi Movie Updates in Tamil : இயக்குநர் ராஜமௌலி திரைப்படம் என்றாம், ஒவ்வொருவருக்கும் மாபெரும் எதிர்பார்ப்பு இருக்கும். அதிலும் தெலுங்கு, தமிழ் என இல்லை உலகளவில் அவரது ரசிகர் பட்டாளம் அதிகம்.

ஏனென்றால் அவரது டாப் லிஸ்ட் படங்கள் பட்டியலில், பாகுபலி, ஆர்ஆர்ஆர்,என தொடரும். இவரது படமானது தேசிய விருதுகளை தழுவி வரும் நிலையில், இவரின் படங்களில் நடிக்க அனைத்து நடிகர்களும் முன்னெடுத்து வரிசை கட்டி நிற்பர்.

ராஜமௌலி புதிய படம்

மகேஷ் பாபு, எஸ்.எஸ். ராஜமௌலி(Mahesh Babu Rajamouli Movie) திரைப்படத்தின் பெயர் டீசர் வெளியாகியுள்ளது. ஆர்ஆர்ஆர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பின் நீண்ட நாள் களித்து இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி நடிகர் மகேஷ் பாபுவை நாயகனாக வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார்.

இதில், நாயகியாக பிரியங்கா சோப்ராவும் வில்லனாக பிருத்விராஜும் நடித்து வருகின்றனர். இதன் படப்பிடிப்பு பல பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

25 கோடி ரூபாய் செலவு

இந்த நிலையில், இப்படத்தின் பெயர் அறிவிப்புக்கான நிகழ்வு ஹைதராபாத்திலுள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில், படத்திற்கு வாரணாசி எனப் பெயரிட்டு டீசரை(Varanasi Teaser Update in Tamil) வெளியிட்டனர். தற்போது, யூடியூபிலும் வெளியாகியுள்ளது.

டைம் டிராவலர் கதையில் காசியை மையமாக வைத்து ராமாயண புராணத்துடன் கூடிய படமாக இது உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இப்பட டைட்டில் அறிவிப்பு நிகழ்ச்சிக்கு மட்டும் 25 கோடி ரூபாய் செலவு செய்துள்ளார்கள்(Varanasi Title Launch Event 2025 Budget) என்று தகவல் வெளிவந்துள்ளது.

அதேசமயம், தனக்கு இறை நம்பிக்கை இல்லை என்று ராஜமௌலி கூறினாலும், அவரது மனைவி அதீத இறை நம்பிக்கை கொண்டவர். இவர் கடைசியாக பார்த்த ரிஷெப் ஷெட்டியின் காந்தார 2 ஆம் பாகத்திற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தும், இந்த படத்திற்கு தேசிய விருது கொடுக்கவில்லை என்றால் நான் ஆச்சரியப்படுவேன் என்றும் கூறி இருந்தார். இந்நிலையில், வாராணாசி படம் எப்படி இருக்கும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.