வெளியான காந்தாரா 1 -ன் வாய்பிளக்கும் வசூல்! மொத்தம் எவ்வளவு?

Kantara Collection Total: காந்தாரா 1 ஆம் பாகத்தின் உலகளவு வசூல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் இவ்வளவு வசூலா என்று கூறும்படி, தமிழகத்தில் வசூல் நிலவரமும் வெளியாகியுள்ளது.
Kantara Chapter 1 Movie Box Office Collection Worldwide Total Till Now
Kantara Chapter 1 Movie Box Office Collection Worldwide Total Till NowGoogle
2 min read

காந்தாரா முதல் படம்

Kantara Chapter 1 Movie Box Office Collection Worldwide Total : காந்தாரா முதல் படம் 2022 ஆம் வெளிவந்து மக்களிடையே நல்லதொரு வரவேற்பை பெற்றது. ரிஷப்ஷெட்டி இயக்கி கதாநாயகனாக நடித்த இந்த படத்தில், கிஷோர், சுவாராஜ் ஷெட்டி, ஷாலினி குரு உள்ளிட்ட நடிகர்கள் நடித்திருந்தனர். மக்களிடையே நல்லதொரு வரவேற்பை பெற்ற இந்தப்படம், வணிக ரீதியாகவும் வசூல் சாதனை செய்தது.

காந்தாரா 1 ஆம் பாகம்

காந்தாரா படத்தை தொடர்ந்து இதன் இரண்டாவது படமாக காந்தார 1 என படம் ரிலீஸ் செய்யப்போவதாக தகவல் வெளிவந்தது. இதைத்தொடர்ந்து, காந்தாரவின் டிரைலர் மற்றும் டீசர் வெளியாகி பல லட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது. இதைத்தொடர்ந்து காந்தார 1 ஆம் பாகம் அக்டோபர் 2 ஆம் தேதி, 2025 ஆம் ஆண்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தகவலின்படி 2 ஆம் தேதி வெளியாகியது.

படத்தின் வசூல்

மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படத்தை, ரிஷப்ஷெட்டி இயக்க, ருக்மணி வசந்த், குல்ஷன் தேவ்வையா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். கதாபாத்திரங்கள் தங்களின் நடிப்பை துள்ளியமாக வெளிப்படுத்திய நிலையில், இப்படத்தின் கதைக்களம் நகர்வு மிகவும் நேர்த்தியாக ரசிகர்களை கவர்ந்தது, குறிப்பாக இப்படத்தின் வி.எஃப். எக்ஸ் அடுத்த படத்தின் தரத்தை கட்டத்திற்கு அழைத்து சென்றது என்று கூறலாம். இத்தகைய சாராம்சத்துடன் வெளியான இந்த படம், காந்தார முதல் படத்தை விட இதன் கொண்டாட்டம் பன்மொழிகளிலும், ரசிகர்கள் மத்தியல் வசூலாக வெளிவந்தது.

வசூல் சாதனை

இப்டத்தின் வசூல் முதல் வாரம், 10 நாட்கள் என கணக்கிடப்பட்டு, 2025ஆம் ஆண்டு இந்திய சினிமாவில் வெளிவந்த படங்களிலேயே அதிக வசூல் செய்த படம் என்கிற சாதனையை படைத்துள்ளது. அதவாது உலகளவில் 855 கோடி வசூல் செய்து இந்த சாதனையை தட்டி பறித்துள்ளது.

தமிழ்நாடு வசூல்

இந்த நிலையில், தமிழ்நாட்டில் காந்தாரா சாப்டர் 1 செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 74 கோடி வசூல் செய்துள்ளது. தமிழகத்தில் இப்படத்தின் இறுதி வசூல் இதுவே ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்கள் மகிழ்ச்சி

காந்தாரா 1 ஆம் பாகத்தை எதிர்நோக்கி இருந்த ரசிகர்களுக்கு விருந்தாக இந்தப்படம் இருந்தது என்ற கருத்து பரவி வரும் நிலையில், ரிஷெப் ஷெட்டியை தாண்டி இப்படத்திற்கு என தனி ரசிகர் பட்டாளமே கூடியுள்ளது. வணிக ரீதியாக மாபெரும் தொகையை வசூல் செய்து சாதனை படைத்துள்ள இந்த படத்தின் ஓடிடி தேதியை ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

ஓடிடி கருத்து

1 மாதங்கள் ஆகியும் உலகளவில் இன்றும் பல திரையரங்கத்தில் காந்தாரா 1 ஒளிப்பரப்பப்பட்டு கொண்டிருக்கிறது, இதனால் திரையரங்கம் மற்றும் ஓடிடி என கணக்கிட்டு பார்த்தால் அதன் வசூல் மேலும் உச்சம் தொடும் என்றால் மிகைாயாகது. எனவே, பொருத்திருந்து இப்படத்தின் இறுதியான வசூல் எவ்வளவு என்று பார்ப்போம்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in