Vijay Antony's "Nooru Saami": OTT release date announced! google
சினிமா

விஜய் ஆண்டனியின் "நூறு சாமி": ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

இயக்குநர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த 'நூறு சாமி' திரைப்படம் ஆகஸ்ட் 7 அன்று ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

Kavitha prasanna

The film 'Nooru Saami', starring Vijay Antony and directed by Sasi, is set to release on the ZEE5 OTT platform on August 7.

"நூறு சாமி": ஓடிடி வெளியீட்டுத் தேதி

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்து சமீபத்தில் வெளியான "நூறு சாமி" திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

ரசிகர்களின் மனம் கவர்ந்த திரைப்படம்

பிரபல இயக்குநர் சசியின் இயக்கத்தில் உருவான இத்திரைப்படம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட குடும்பத் திரைப்படமாகும்.

”நூறு சாமி” கதைக்களம்

கணவனை இழந்த பெண் ஒருவருக்கு, அவரது மகன்கள் மறுமணம் செய்து வைக்க முயற்சிப்பதையும், அதற்கு அவர்கள் சமூகத்தில் எதிர்கொள்ளும் சவால்களையும் மையமாகக் கொண்டு உருவான இத்திரைப்படம் திரையரங்குகளில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

கதாப்பாத்திரங்களுக்கு உயிர்க் கொடுத்த நட்சத்திரங்கள்

இத்திரைப்படத்தில் சுவாசிகா, அஜய் திக்ஷன், கருணாஸ், லிஜோமோல் ஜோஸ், பாலாஜி சக்திவேல், அருள்தாஸ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இத்திரைப்படத்திற்கு பாலாஜி ஸ்ரீராம் இசையமைத்துள்ளார்.

ஜீ5 ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 7-இல் ரிலீஸ்

"நூறு சாமி" திரைப்படத்தின் டிஜிட்டல் வருகைக்காக ரசிகர்கள் நீண்ட நாட்களாகக் காத்திருந்த நிலையில், வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி இத்திரைப்படம் ஜீ5 (ZEE5) ஓடிடி தளத்தில் வெளியாகும் எனப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: "சாதி, மதமற்றவர் சான்றிதழ்" சட்டம் இயற்ற வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் நடிகர் பார்த்திபன்!

======