Vijay Sethupathi Pocket Novel Pongal 2027 Release source:google, ai generated
சினிமா

பொங்கல் விருந்தாக வெளியாகும் தியாகராஜன் குமாரராஜா - விஜய் சேதுபதியின் 'பாக்கெட் நாவல்': அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள 'பாக்கெட் நாவல்' திரைப்படம் ஜனவரி 14 பொங்கலுக்கு வெளியாகிறது.

Kavitha prasanna

Vijay Sethupathi Pocket Novel Pongal 2027 Release

இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகியுள்ள ‘பாக்கெட் நாவல்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் ரிலீஸ் அறிவிப்பு

வரும் பொங்கல் விழாவை முன்னிட்டு 2027 ஜனவரி 14-ஆம் தேதி இத்திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

நடிகர் படப்பிடிப்பு மற்றும் எதிர்பார்ப்பு

நடிகர் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ள இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் வெற்றிகரமாக நிறைவடைந்தன.

ஏற்கனவே 'சூப்பர் டீலக்ஸ்' படத்திற்கு தேசிய விருது பெற்ற தியாகராஜன் குமாரராஜா - விஜய் சேதுபதி கூட்டணியில் மீண்டும் உருவாகியுள்ளதால், திரைத்துறையிலும் ரசிகர்களிடையேயும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தயாரிப்பு மற்றும் நட்சத்திரப் பட்டாளம்

டைலர் டர்டன் மற்றும் கினோ ஃபிஸ்ட் தயாரிப்பில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது. விஜய் சேதுபதியுடன் மாளவிகா மோகனன், ராஜ் பி ஷெட்டி, கிஷோர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

முன்னதாக இளையராஜா இசையமைப்பதாக இருந்த நிலையில், கருத்து வேறுபாட்டால் அவர் விலகியதை அடுத்து ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பாளர் என அறிவிக்கப்பட்டது.

ஜப்பானிய மொழியிலும் ரிலீஸ்

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாகி வரும் 'பாக்கெட் நாவல்' திரைப்படம் தமிழ் தவிர்த்து ஜப்பானிய மொழியிலும் வெளியாகும் எனப் படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சர்வதேச விருது விழாவில் மக்கள் செல்வன்: எம்மி விருது வழங்கும் முதல் இந்தியராகிறார் நடிகர் விஜய் சேதுபதி!

============