PM Narendra Modi on New GST 2.0 Reforms Will Continue in Tamil 
தற்போதைய செய்திகள்

GST : ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் தொடரும் - பிரதமர் மோடி உறுதி!

PM Narendra Modi on New GST 2.0 Reforms : நாட்டில் ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் மேலும் தொடரும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Bala Murugan

உத்தரப்பிரேதசத்தில் பிரதமர் மோடி :

PM Narendra Modi on New GST 2.0 Reforms : உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் 'அல்டிமேட் சோர்ஸிங் இங்கிருந்து தொடங்குகிறது' என்ற கருப்பொருளில் 2,400 அரங்குகளுடன் அமைக்கப்பட்ட சர்வதேச வர்த்தக கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி(International Trade Show) வைத்தார். அதில் கைவினை தொழில்கள், ஜவுளி, தோல் பொருட்கள், வேளாண், தகவல் தொழில் நுட்ப சாதனங்கள் இடம்பெற்றுள்ள இந்த கண்காட்சி, தற்சார்பு இந்தியாவை வலியுறுத்தும் வகையில் அமைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி மற்றவர்களை நம்பியிருப்பதன் மூலம் முன்னேற்றத்தை அடைய முடியாது என்று தெரிவித்தார்.

பிரதமர் மோடி பேச்சு :

மேலும், மற்றவர்களை பெரிதும் சார்ந்திருக்கும் ஒரு நாட்டின் வளர்ச்சி, வரம்புகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று தெரிவித்த அவர், இந்தியா தன்னம்பிக்கைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். பிற நாடுகளை சார்ந்திருப்பதை குறைக்க வேண்டும். ஆயுதப் படைகள் உள்நாட்டு தயாரிப்புகளை விரும்புகின்றன; பிறரை சார்ந்திருப்பதை குறைக்க எண்ணுகின்றன என்று கூறினார். ஒவ்வொன்றும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என்ற முத்திரையை தாங்கும் அமைப்பை உருவாக்குகிறோம். இந்தியா சுயசார்புடையதாக மாற வேண்டும்; ஒவ்வொரு பொருளையும் இந்தியாவில் தயாரிக்க வேண்டும்; இடையூறுகள் நம்மை திசைதிருப்பாது என்று பேசினார்.

மேலும் படிக்க : திருப்பதி பிரம்மோற்சவம் : கூட்ட நெரிசலை சமாளிக்க AI தொழில்நுட்பம்

ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் தொடரும் :

மேலும் தொடர்ந்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அதில் புதிய திசைகளையும் புதிய வாய்ப்புகளையும் காண்கிறோம். உலகில் இடையூறுகள், நிச்சயமற்றதன்மை இருந்தபோதிலும் இந்தியாவின் வளர்ச்சி சுவாரஸ்யமாக உள்ளது. நமது உறுதிப்பாடு, நமது மந்திரம். நாட்டில் ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் தொடரும்(Next Gen GST Reforms), பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்தி மக்கள் மீதான வரிச்சுமை குறைக்கப்படும். 2014ஆம் ஆண்டில் 1,000 ரூபாய் சட்டைக்கு 117 ரூபாய் வரி விதிக்கப்பட்டது; 2017ல் ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்ட பிறகு வரி 50 ரூபாயாக குறைந்தது. தற்போது ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் மூலம் வரியாக 35 ரூபாய் மட்டுமே செலுத்த வேண்டியிருக்கும். பாதுகாப்புத்துறையில் இந்தியா துடிப்பான வளர்ச்சியை அடைந்து வருகிறது என்று கூறினார்.