திருப்பதி பிரம்மோற்சவம் : கூட்ட நெரிசலை சமாளிக்க AI தொழில்நுட்பம்

AI Technology in Tirumala Brahmotsavam 2025 : திருப்பதியில் பிரம்மோற்சவம் தொடங்கிய நிலையில், கூட்ட நெரிசலை சமாளிக்க ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
AI Technology in Tirumala Brahmotsavam 2025 in Tamil
AI Technology in Tirumala Brahmotsavam 2025 in Tamil
2 min read

திருப்பதி பிரம்மோற்சவம் :

AI Technology in Tirumala Brahmotsavam 2025 : உலகப் புகழ் பெற்ற திருப்பதி கோவிலுக்கு ஆண்டு தோறும் லட்சக் கணக்கான பக்தர்கள் வருகை தந்து, பெருமாளை சேவித்து செல்கின்றனர். இங்கு நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்று நவராத்திரி பிரம்மோற்சவம். இது ஆண்டு தோறும் நடத்தப்படும். பிரம்மனே பிரம்மோற்சவத்தை நடத்துவதாக ஐதீகம். இதற்காக திருமலை கோவில் விழாக்கோலம் பூண்டிருக்கிறது.

கொடியேற்றத்துடன் தொடங்கிய பிரம்மோற்சவம் :

கோவிலில் உள்ள கொடி மரத்தில் நேற்று மாலை சிறப்பு பூஜைகளுக்கு பிறகு, கொடியேற்றப்பட்டது. உற்சவ மூர்த்​தி​களான ஸ்ரீதே​வி, பூதேவி சமேத​ராய் மலை​யப்​பரை ஊர்​வல​மாக தங்க கொடிமரத்​தின் அருகே கொண்டு வந்​தனர். அங்கு வேத​பண்​டிதர்​கள் வேதங்​கள் ஓத, மங்கள வாத்​தி​யங்​கள் முழங்க, கருடன் சின்​னம் பொறித்த கொடி, தங்க கொடி மரத்​தில் ஏற்றப்பட்டது.முப்​பது முக்​கோடி தேவாதி தேவர்​களை​யும் பிரம்​மோற்​சவத்​துக்கு அழைப்பு விடுப்​ப​தற்​கான ஒரு நிய​தி​ இது.

தினமும் சுவாமி வீதியுலா :

அக்​டோபர் மாதம் 2ம் தேதி வரை தின​மும் காலை​யில் 8 மணி முதல் 10 மணி வரை​யிலும், இரவில் 7 மணி முதல் 9 மணி வரை​யிலும் உற்​சவ​ரான மலை​யப்​பர் வித​வித​மான(TTD Brahmotsavam 2025 Dates) வாக​னங்​களில் 4 மாட வீதி​களில் பவனி வந்து பக்​தர்​களுக்கு அருள் பாலிக்க உள்​ளார். ஒரு நாள் தங்க தேரோட்​டத்​தி​லும், ஒரு நாள் மர தேரிலும் பவனி வந்து பெருமாள் காட்சி அளிக்கிறார். பிரம்​மோற்​சவம் நடை​பெறும் அனைத்து நாட்​களி​லும் தின​மும் மதி​யம் உற்சவ மூர்த்​தி​களுக்கு திரு​மஞ்சன நிகழ்ச்சி நடை​பெறு​வது ஐதீகம். இதில் இரண்டு முறை சிறப்பு திரு​மஞ்சன நிகழ்ச்​சிகள் நடத்​தி, வித​வித​மான அலங்​காரங்​களும் செய்​யப்​படும்.

ஆந்திர அரசு சார்பில் பட்டு வஸ்திரங்கள் :

பிரம்​மோற்சவ விழா​வினை முன்​னிட்டு திருப்​பதி மற்​றும் திரு​மலை விழாக்​கோலம் பூண்​டுள்​ளது. முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு ஆந்​திர அரசு தரப்​பில் பட்டு வஸ்​திரங்​களை ஏழுமலையானுக்கு காணிக்​கை​யாக வழங்​கி​னார். ஆஞ்​சநேயர் கோயி​லில் இருந்து பட்டு வஸ்​திரத்தை தலை​யில் சுமந்து சென்று கோயி​லில் தேவஸ்​தான அர்ச்​சகர்​களிடம் அவர் சமர்ப்​பித்​தார்.

திருமலையில் துணை ஜனாதிபதி தரிசனம் :

பிரம்​மோற்சவ விழா​வில் முதல் நாளான நேற்று இரவு, ஸ்ரீதே​வி, பூதேவி சமேத​ராய் மலை​யப்​பர் ஆதி சேஷ​னாக கருதப்​படும் பெரிய சேஷ வாக​னத்​தில் எழுந்​தருளி​னார். இரவு 7 மணி முதல் 9 மணி வரை நடை​பெற்ற இந்த வாகன சேவை​யில் குடியரசு துணை தலை​வர் சிபி ராதாகிருஷ்ணன், ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு ஆகியோர் கலந்து கொண்​டனர். வாகன சேவையை காண மாட வீதி​களில் திரளான பக்​தர்​கள் திரண்டு இருந்தனர். 28 மாநிலங்​களில்​ இருந்​து வந்​திருந்​த நடன கலைஞர்​களின்​ கலை நிகழ்ச்​சிகள்​ அனைவரை​யும்​ கவர்​ந்​தன.

திருப்பதியில் AI தொழில்நுட்பம் :

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் கூட்டத்தை சீரமைக்க செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக செயற்கை நுண்ணறிவு ஒருங்கிணைக்கப்பட்ட கட்டுப்பாட்டு அறை (ஐசிசி), வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸில் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், நிகழ்வுகளை ஏஐ மூலம் பதிவு செய்து, கண்காணிப்பு கேமராக்கள் மூலம் உடனுக்குடன் அறிய முடியும். கோயிலில் பக்தர்களின் கூட்டத்தை சீரமைக்க ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது நாட்டிலேயே இதுவே முதல் முறையாகும்.

மேலும் படிக்க : TTD Brahmotsavam 2025 : ஏழுமலையான் கோவில் அலங்காரத்திற்கு 60 டன் மலர்கள்

விரைவாக தரிசனம் செய்யலாம் :

மேலும், தரிசன வரிசையில் குற்றவாளிகள் அல்லது தீவிரவாதிகள் தொடர்பான சந்தேகத்துக் குரிய நபர்களை சுலபமாக அடையாளம் காண முடியும். காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க முடியும். மேலும் பக்தர்களின் கூட்ட நெரிசலை உடனுக்குடன் தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து விரைவான தரிசன ஏற்பாட்டுக்கு இது வழிவகுக்கும்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in