Indian Test Squad for West Indies Series 2025 : கிரிக்கெட் என்றாலே இங்கு அது பலருக்கு திருவிழா தான். அதையும் தினத்திருவிழாவாக கொண்டாடுவோர் இங்கு பலர். இதிலும் உலக கோப்பை, ஐபிஎல் என பல வித கொண்டாட்டங்கள் இருந்தாலும் டெஸ்ட் தொடருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளமே உலகம் முழுவதும் இருக்கிறது எனலாம். அதன்படி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடர் நடக்கவிருக்கும்(IND vs WI Test Match 2025) நிலையில், இதில் 3 தமிழக வீரர்கள் இடம்பெற்றுள்ளது, தமிழக கிரிக்கெட் பிரியர்களை கொண்டாடத்தில் ஆழ்த்தியுள்ளது.
களமிறங்கும் தமிழக வீரர்கள் :
இதைத்தொடர்ந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த 3 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
தொடரும் போட்டி :
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது. இதற்கான அறிவிப்பு முன்கூட்டியே வெளிவந்த நிலையில், தற்பொழுது இந்த தொடரின் முதல் போட்டி ஆமதாபாத்தில் அக்., 2ம் தேதி தொடங்க இருக்கிறது. 2வது போட்டி(India vs West Indies Test Match 2025 Date) டில்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்திலும் நடக்க இருக்கிறது. இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.
களமிறங்கும் தமிழக வீரர்கள் :
இந்திய வீரர்களின் இதில், குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன்(Sai Sudharsan), ஜெகதீஷன், வாஷிங்டன் சுந்தர் ஆகிய 3 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதனை தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் கொண்டாடிவரும் நிலையில், நடக்கவிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆல் ரவுண்டர் ஜடேஜாவுக்கு துணை கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் கருண் நாயர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக படிக்கல் சேர்க்கப்பட்டுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. காயத்தில் இருந்து இன்னும் மீண்டு வராத ரிஷப் பண்ட் அணியில் இடம்பிடிக்கவில்லை என்பது அவரின் ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தினாலும் அடுத்ததாக அவரது சொந்த மண்ணில் நடக்கவிருக்கும் தென்னாப்ரிக்கா அணிக்கு எதிரான தொடரில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க : ஆசிய கோப்பை, இந்திய அணி : கேப்டன் சூர்யகுமார், துணை கேப்டன் கில்
களமிறங்கும் இந்திய அணி வீரர்கள் :
இதில் சுப்மன் கில் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள(Indian Squad for West Indies Test Series 2025) இந்திய அணியில் சுப்மன் கில் (கேப்டன்) ஜெயஸ்வால், கே.எல். ராகுல் சாய் சுதர்சன், தேவதட் படிக்கல், நிதிஷ் குமார் ரெட்டி, துருவ் ஜூரேல், என். ஜெகதீசன் ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ் பிரசித் கிருஷ்ணா குல்தீப் யாதவ் உள்ளிடோர் கலந்து கொள்ள உள்ளனர்.