

ஆசிய கோப்பை கிரிக்கெட் :
India Squad for Asia Cup 2025 Announcement : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 9ம் தேதி தொடங்குகிறது. 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்தத் தொடர் இந்த முறை டி20 முறையில் நடைபெறுகிறது. ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் ஆகிய நாடுகளும், பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய நாடுகளும் பங்கேற்கின்றன.
இந்திய தனது தனது முதல் போட்டியில் செப்டம்பர் 10ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தையும், 14 ஆம் தேதி பாகிஸ்தானையும், 19ஆம் தேதி ஓமனையும் எதிர்கொள்கிறது.
இந்திய அணி அறிவிப்பு :
இந்தநிலையில், ஆசிய கோப்பை தொடரில் விளையாடும் இந்திய அணி(India Squad for Asia Cup 2025) அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய வீரர்கள் சிலருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
சூர்ய குமார் யாதவ் (கேப்டன்),
சுப்மன் கில் (துணை கேப்டன்)
அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, சிவம் துபே, அக்சர் படேல்
ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்ஷித் ரானா.
மேலும் படிக்க : ICC ஒருநாள் பேட்டிங் தரவரிசை : டாப் 10 ல் நான்கு இந்திய வீரர்கள்
முக்கிய வீரர்களுக்கு வாய்ப்பில்லை :
இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. சிராஜுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று வாஷிங்டன் சுந்தரும் வாய்ப்பை இழந்துள்ளார்.