ஆசியக் கோப்பை டி20 :
Afghanistan vs Hong Kong First Match in Asia Cup 2025 : ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் ( துபாய் ) இன்று தொடங்குகிறது. 28ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் 8 அணிகள் கலந்து கொள்கின்றன.
‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் இடம் பெற்றுள்ளன. ‘பி’ பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகள் உள்ளன.
முதலில் லீக் சுற்று போட்டிகள் :
லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்றின் முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும். இந்த சுற்றில் 4 அணிகளும் தங்களுக்குள் தலா ஒருமுறை மோதும். இதில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு செல்லும்.
துபாய், அபுதாபியில் போட்டிகள் :
சூப்பர் 4 சுற்று 20ம் தேதி முதல் 2-ம் தேதி வரை நடைபெறுகிறது. சாம்பியன் பட்டம் வெல்வது யார் என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டி 28ம் தேதி நடைபெறுகிறது. தொடரின் அனைத்து ஆட்டங்களும் துபாய் மற்றும் அபுதாபியில் நடத்தப்படுகிறது.
இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில், ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் - ஹாங்காங்(Afghanistan vs Hong Kong Match Time) அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு அபுதாபியில் போட்டி தொடங்குகிறது.
இந்தியா நாளை பலப்பரீட்சை :
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் நாளை (10ம் தேதி) ஐக்கிய அரபு அமீரகத்துடன் மோதுகிறது(India vs UAE Asia Cup 2025 Match Date). இந்த ஆட்டம் துபாயில் நடைபெறுகிறது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் வரும் 14ம் தேதி நடக்க இருக்கிறது.
மேலும் படிக்க : ஆசிய கோப்பை, இந்திய அணி : கேப்டன் சூர்யகுமார், துணை கேப்டன் கில்
2026ல் டி20 உலகக் கோப்பை தொடர் :
டி20 உலகக் கோப்பை தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி-மார்ச் மாதங்களில் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி 8 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இதில் 7 தொடர்கள் 50 ஓவர்கள் வடிவில் நடத்தப்பட்டவை. 2016ம் ஆண்டு இந்தியா வென்ற தொடர் டி 20 வடிவில் நடத்தப்பட்டது. கடைசியாக 2023-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆசிய கோப்பை தொடரில் இந்தியா கோப்பையை வென்றிருந்தது.
===============