Italian Jannik Sinnar in ATP Rankings Men 2025 in Wimbledon Tennis Championship https://x.com/search?q=%23JannikSinner
விளையாட்டு

சர்வதேச டென்னிஸ் தரவரிசை : முதலிடத்தில் நீடிக்கும் ஜானிக் சின்னர்

Jannik Sinnar in ATP Rankings Men 2025 : விம்பிள்டன் டென்னிசில் சாம்பியன் பட்டம் வென்ற ஜானிக் சின்னர், தர வரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

Kannan

டென்னிஸ் தரவரிசை முதலிடத்தில் சின்னர் :

Jannik Sinnar in ATP Rankings Men 2025 : டென்னிஸ் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசையை ஏடிபி வெளியிட்டது. ஒற்றையர் பிரிவில் இத்தாலியின்(Italian) ஜானிக் சின்னர், முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டார். லண்டனில் நடந்த விம்பிள்டன்(Wimbledon Tennis) ஒற்றையர் இறுதிப் போட்டியில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, முதல் முறையாக விம்பிள்டன் கோப்பையை வென்றார்.

2வது இடத்தில் அல்காரஸ் :

இந்தத் தொடரில் இறுதிப்போட்டி வரை சென்ற ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ்(Carlos Alcaraz), 2வது இடத்தில் நீடிக்கிறார். அரையிறுதியில் தோல்வியடைந்த அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ், 4வது இடத்துக்கு முன்னேறினார். செர்பியாவின் ஜோகோவிச் 6வது இடத்தில் தொடர்கிறார்.

மேலும் படிக்க : முதன்முறையாக விம்பிள்டன் சாம்பியன் : ஜன்னிக் சின்னர் அபாரம்

பெண்கள் தரவரிசை, முதலிடத்தில் சபலென்கா :

பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு தரவரிசையில்(ATP Rankings Women 2025) போலந்தின் இகா ஸ்வியாடெக், 4வது இடத்தில் இருந்து 3வது இடத்துக்கு முன்னேறினார். விம்பிள்டன் பைனலில் அசத்திய இவர், முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். பைனல் வரை சென்ற அமெரிக்காவின் அனிசிமோவா, 12வது இடத்தில் இருந்து 7வது இடத்துக்கு முன்னேறினார். ரஷ்யாவின் மிர்ரா ஆன்ட்ரீவா, 5வது இடத்தை கைப்பற்றினார். முதலிரண்டு இடங்களில் பெலாரசின் சபலென்கா, அமெரிக்காவின் கோகோ காப் நீடிக்கின்றனர்.

ATP Ranking Men 2025 List in Tamil