Italian Jannik Sinner First Wimbledon Tennis Champion 2025
Italian Jannik Sinner First Wimbledon Tennis Champion 2025https://x.com/Wimbledon

முதன்முறையாக விம்பிள்டன் சாம்பியன் : ஜன்னிக் சின்னர் அபாரம்

Italian First Wimbledon Tennis Champion 2025 : விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தி இருக்கிறார் இத்தாலியின் ஜன்னிக் சின்னர்.
Published on

சின்னர் - அல்காரஸ் மோதல் :

Italian First Wimbledon Tennis Champion 2025 : கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்றது. ஆடவர் ஒற்றையர் பட்டத்திற்கான ஆட்டத்தில்

உலகின் முதல் நிலை வீரரான 23 வயதான இத்தாலியின் ஜன்னிக் சின்னர்(Jannik Sinner) மற்றும் இரண்டாம் நிலை வீரரான 22 வயது கார்லோஸ் அல்கராஸ் பலப்பரீட்சை நடத்தினர்.

அடித்து விளையாடிய சின்னர் :

இந்த ஆட்டம் சுமார் மூன்று மணி நேரம் நீடித்தது. கடந்த மாதம் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்(French Open Tennis) தொடரின் இறுதிப் போட்டியில் சின்னரை அல்கராஸ் வீழ்த்தி பட்டத்தை கைப்பற்றி இருந்தார். இந்நிலையில், இம்முறை லண்டனில் துல்லியமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ஜேனிக் சின்னர். அவரது ஆட்டத்தை சமாளிக்க முடியாமல் துவண்டு போனார் அல்கராஸ்.

விம்பிள்டன் சாம்பியன் ஜேனிக் சின்னர்:

முதல் செட்டை 4-6 என்ற கணக்கில் அல்கராஸ் கைப்பற்றினாலும், சுதாரித்து எழுச்சி பெற்ற ஜேனிக் சின்னர்(Jennik Sinner Wimbledon) அடுத்ததடுத்த செட்களை 6-4, 6-4, 6-4 என்ற கணக்கில் வசப்படுத்தினார். இதையடுத்து, விம்பிள்டன் பட்டத்தை அவர் வென்றார். இந்தப் பட்டத்தை சின்னர் வெல்வது இதுவே முதன்முறை.

மேலும் படிக்க : 5 பந்துகளில் 5 விக்கெட்டுகள் : அயர்லாந்து பவுலர் உலக சாதனை

இந்த வெற்றியின் மூலம் ஓபன் ஈராவில் விம்பிள்டன் சாம்பியன் பட்டம்(Wimbledon Tennis Champion 2025) வென்ற முதல் இத்தாலி வீரர் என்ற சாதனையை சின்னர் படைத்தார். அதிக முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற இத்தாலி வீரர் என்ற சாதனையையும் சின்னர் படைத்தார். விம்பிள்டனில் முதல் நிலை வீரர் இறுதி ஆட்டத்தில் இரண்டாம் நிலை வீரரை வீழ்த்துவது இது 11-வது முறை. இந்த வெற்றி சின்னரின் 81வது வெற்றி அமைந்துள்ளது.

=====

logo
Thamizh Alai
www.thamizhalai.in