ஆஷஸ் டெஸ்ட் தொடர்
AUS vs ENG Test Match Highlights 2025 : இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெறும் ஆஷஸ் தொடர் மிகவும் பிரசித்து பெற்றது. அதன்படி இந்த ஆண்டுக்கான முதல் டெஸ்ட் போட்டி, பெர்த் நகரில் நேற்று தொடங்கியது. முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி, ஆஸி வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கின் துல்லியமான பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் தத்தளித்தது.
172 ரன்கள் - சுருண்ட இங்கிலாந்து
அவர் ஏழு விக்கெட்டுகளை சாய்த்து, அதிரடி காட்டினார். பிரென்டன் டாகெட்டும்அற்புதமாக பந்து வீசி இங்கிலாந்து வீரர்களை திணறடித்து 2 விக்கெட்டுகளை சாய்த்தானர். இதன்காரணமாக, 32.5 ஓவர்களில் இங்கிலாந்து அணி 172 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணியில் ஹாரி புரூக் சிறப்பாக ஆடி 52 ரன் எடுத்தார். ஒல்லி போப் 36, ஜேமி ஸ்மித் 33 ரன் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகினர்.
ஆஸியை மிரட்டிய வேகப்பந்து வீச்சு
பின்னர், முதல் இன்னிங்சை துவக்கிய ஆஸி அணி, வேகப்பந்து வீச்சால் மிரண்டது. துவக்க வீரர்கள் ஜேக் வெதரால்ட் மார்னஸ் லபுஷனே விக்கெட் எடுக்காமல் பெவிலியின் திரும்பினர். இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் அட்டகாசமாக பந்துகளை வீசி அதிரடியாக 5 விக்கெட்டுகளை பறித்தார்.
பிரைடன் கார்ஸ் தன் பங்குக்கு 2 விக்கெட்டுகளை சாய்த்தார். அதனால் மளமளவென விக்கெட்டுகளை இழந்த ஆஸி, 39 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 123 ரன் மட்டுமே எடுத்து திணறியது. அலெக்ஸ் கேரி அதிகபட்சமாக 26 ரன் எடுத்தார். இதையடுத்து முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
ஒரேநாளில் 19 விக்கெட்டுகள் காலி
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்டின் முதல் நாளில் 19 விக்கெட்டுகள் விழுந்தன. வேகப்பந்து வீச்சின் சொர்க்கமாக மாறிய பெர்த் ஆடுகளம், இன்று என்ன செய்யப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆஷஸ் தொடரில் ஒரே நாளில் 19 விக்கெட்டுகள் விழுவது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
=====