ஆன்டிகுவா அணி வெற்றி :
Shakib Al Hasan Most Runs and Wickets in T20 : மேற்கு இந்திய தீவுகளில் கரீபியன் பிரிமியர் லீக் 20 ஓவர் தொடர் நடைபெற்று வருகிறது. நார்த் சவுண்டில் நடைபெற்ற போட்டி ஒன்றில், 113 ரன்கள் எடுத்திருந்த செயின்ட் கிட்ஸ் அணியை, ஆன்டிகுவா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கொண்டது.
டி 20ல் 500 விக்கெட்டுகள் :
ஆன்டிகுவா அணி வீரரும், வங்கதேசத்தை சேர்ந்தவருமான சகீப் அல் அசன்(Shakib Al Hasan Wickets), 3 விக்கெட்டுகளை சாய்த்தார். இதில் முகமது ரிஸ்வானை அவுட்டாக்கிய போது, 'டி-20' அரங்கில் 500 விக்கெட் என்ற மைல்கல்லை அவர் எட்டினார். இதுவரை 457 போட்டிகளில் விளையாடியுள்ள சகீப் அல் அசன், 502 விக்கெட்டுகளை சாய்த்து இருக்கிறார்.
கரீபியன் பிரிமியர் லீக் அரங்கில் இந்த இலக்கை அடைந்த முதல் வங்கதேசத வீரர் என்ற பெருமை ஹசனுக்கு கிடைத்து இருக்கிறது. சர்வதேச அரங்கில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள 5வது பவுலர் ஹசன் ஆவார்.
5வது இடத்தில் சாகிப் அல் ஹசன் :
முதல் நான்கு இடத்தில் ரஷித் கான் (660, ஆப்கன்), பிராவோ (631, மேற்கு இந்திய தீவுகள்), சுனில் நரைன் (590, மேற்கு இந்திய தீவுகள்), இம்ரான் தாகிர் (554, தென் ஆப்பிரிக்கா) ஆகியோர் உள்ளனர்.
முதல் 'ஆல் ரவுண்டர்' ஹசன் :
அதேசமயம் 'டி-20' அரங்கில் 7000 ரன்கள், 500 விக்கெட் என்ற மைல்கல்லை கடந்த முதல் 'ஆல் ரவுண்டர்' என சாதனையை அவர் படைத்தார். அடுத்த இரு இடங்களில் மேற்கு இந்திய தீவுகளின் பிராவோ (6,970 ரன்கள், 631 விக்கெட்டுகள்), ஆன்ட்ரி ரசல் (9,361 ரன்கள், 487 விக்கெட்டுகள்) உள்ளனர்.
மேலும் படிக்க : ODI Bowlers Rank : கேசவ் மகாராஜ் முதலிடம், 3ம் இடத்தில் குல்தீப்
-----