ODI Bowlers Rank : கேசவ் மகாராஜ் முதலிடம், 3ம் இடத்தில் குல்தீப்

Keshav Maharaj ICC Men’s ODI Bowling Rankings 2025 : ஒருநாள் கிரிக்கெட் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் தென் ஆப்பிரிக்க அணியின் சுழற்பந்து வீச்சாளரான கேசவ் மகராஜ் முதலிடம் பிடித்துள்ளார்.
Keshav Maharaj ICC Men’s ODI Bowling Rankings 2025
Keshav Maharaj ICC Men’s ODI Bowling Rankings 2025
1 min read

ஒருநாள் போட்டி, பந்து வீச்சாளர் தரவரிசை :

Keshav Maharaj ICC Men’s ODI Bowling Rankings 2025 : ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ICC) வெளியிட்டு இருக்கிறது.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இந்த ஆட்டத்தில் கேசவ் மகராஜ்(Keshav Maharaj) 5 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

687 புள்ளிகளுடன் கேசவ் மகாராஜ் முதலிடம் :

இதன் மூலம் தரவரிசையில் 687 புள்ளிகளுடன் 2 இடங்கள் முன்னேறி முதலிடத்தை(Keshav Maharaj ODI Ranking) அடைந்துள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர், டிசம்பருக்கு பிறகு தரவரிசையில் கேசவ் மகராஜ் முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார்.

3ம் இடத்தில் குல்தீப் யாதவ் :

இலங்கை அணியின் மஹீஷ் தீக்‌ஷனா, இந்தியாவின் குல்தீப் யாதவ்(Kuldeep Yadav ICC Ranking) ஆகியோர் தலா ஒரு இடங்கள் பின்தங்கி முறையே 2 மற்றும் 3வது இடங்களில் உள்ளனர். டாப் 10ல் குல்தீப் யாதவை தவிர இந்திய வீரர்களில் ரவீந்திர ஜடேஜாவும் இடம் பெற்றுள்ளார்.

9வது இடத்தில் ஜடேஜா :

ரவீந்திர ஜடேஜா 616 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் உள்ளார். பேட்டிங் தரவரிசையில்(ICC Men's ODI Batting Ranking) இந்திய அணியின் நட்சத்திர வீரரான ஷுப்மன் கில் 784 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறார். ஸ்ரேயஸ் ஐயர் 6வது இடத்தில் உள்ளார்.

மேலும் படிக்க : ICC ஒருநாள் பேட்டர் தரவரிசை : டாப் 10ல் நான்கு இந்திய வீரர்கள்

டி 20 தரவரிசையில் இந்திய வீரர்கள் :

டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில்(ICC Mens T20 Ranking) இந்தியாவின் அபிஷேக் சர்மா, திலக் வர்மா முதல் இரு இடங்களில் உள்ளனர். கேப்டன் சூர்யகுமார் யாதவ் 6வது இடத்திலும், ஜெய்ஸ்வால் 10வது இடத்தையும் பிடித்துள்ளனர். தென் ஆப்பிரிக்க அணியின் டெவால்ட் பிரேவிஸ் 12வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார்.

=============

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in