முதல் டெஸ்ட்டில் இந்தியா வெற்றி
India vs West Indies 2nd Test Match 2025 Highlights in Tamil : இந்தியா மற்றும் வெஸ்ட் இன்டீஸ் அணி டெஸ்ட் தொடர் விளையாட இருந்த நிலையில் தற்பொழுது இந்தியா வந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்நிலையில், முதல் டெஸ்டில் இந்தியா வென்றது. இரண்டாவது டெஸ்ட் டில்லி, அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 518/5 ரன்னுக்கு 'டிக்ளேர்' செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி 248 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி, 'பாலோ-ஆன்' பெற்றது.
இரண்டாவது இன்னிங்ஸ்
இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணி 390 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. 121 ரன் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய இந்திய அணி, நான்காவது நாள் முடிவில் இரண்டாவது இன்னிங்சில் 63/1 ரன் எடுத்திருந்தது. ராகுல் (25), சுதர்சன் (30) அவுட்டாகாமல் இருந்தனர். இன்று ஐந்தாவது, கடைசி நாள் ஆட்டம் நடந்தது. சாய் சுதர்சன் 39 ரன்னில், சேஸ் சுழலில் சிக்கினார்.
மேலும் படிக்க : இந்தியாவின் மிகப்பெரிய 2 வது ஸ்டேடியம் தயார்! இவ்வளவு கோடியா?
20 வது அரைசதம் கடந்த ராகுல்
அடுத்து வந்த சுப்மன் கில் 13 ரன் மட்டும் எடுத்து வெளியேறினார். வாரிகன் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய ராகுல், டெஸ்ட் அரங்கில் 20 வது அரைசதம் கடந்தார். மீண்டும் வாரிகன் பந்தில் ராகுல் ஒரு பவுண்டரி அடிக்க, இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 124/3 ரன் எடுத்து(India vs West Indies 2nd Test Score), 7 விக்கெட்டில் வெற்றி பெற்றது. ராகுல் (58), துருவ் ஜுரெல் (6) அவுட்டாகாமல் இருந்தனர். இந்திய அணி 2-0 என டெஸ்ட் தொடரை கைப்பற்றி, கோப்பை தன் வசப்படுத்தி, வெற்றியை பதிவு செய்தது. முதல் இன்னிங்ஸை தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட்டிலும் வெற்றியை பதிவு செய்துள்ள இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில், 10வது முறையாக வெற்றி பெற்றது.