ரைசிங் ஸ்டார்ஸ் கிரிக்கெட் தொடர்
Vaibhav Suryavanshi Fastest Century in Asia Cup 2025 : ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கத்தார் தலைநகர் தோகாவில் நடைபெற்று வருகிறது. 2 ஆவது போட்டியில் இந்தியா ஏ மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகள் விளையாடின.
இந்தியா முதலில் பேட்டிங் செய்த நிலையில், தொடக்கம் முதலே ஐக்கிய அரபு அமீரக அணியின் பந்துவீச்சை விளாசித் தள்ளிய வைபவ் சூர்யவன்ஷி பவுண்டரிகளும், சிக்சருமாக அடித்தார்.
32 பந்துகளில் சதம்
பந்துகளை நொறுக்கிய அவர் சூர்யவன்ஷி, 32 பந்துகளில் சதம் விளாசினார். தொடர்ந்து அதிரடி காட்டிய அவர் வெறும் 42 பந்துகளில் 11 பவுண்டரி, 15 சிக்சர்களுடன் 144 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
அதிவேக சதம் - 2வது இந்தியர்
32 பந்துகளில் சதம் விளாசியதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிவேக சதம் விளாசிய 2வது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். அபிஷேக் சர்மா, உர்வில் படேல் ஆகியோர் 28 பந்துகளில் சதம் அடித்து அதிவேக சதம் விளாசிய இந்தியர்கள் என்ற பட்டியலில் முதல் இடத்தில் உள்ளனர்.
ஐபிஎல் சீசனில் அசத்திய சூர்யவன்ஷி
ஐபிஎல் 2025(Vaibhav Suryavanshi IPL Record) சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி கலக்கிய வைபவ் சூர்யவன்ஷி 35 பந்தில் சதம் அடித்து ஐபிஎல் வரலாற்றில் குறைந்த வயதில் சதம் நொறுக்கிய வீரர் என்ற சாதனையை படைத்திருந்தார்.
உர்வில் படேல் - அபிஷேக் ஷர்மா
டி20 கிரிக்கெட்டில் அதிவேக சதம் விளாசிய இந்தியர்களில் 2024ல்
உர்வில் படேல் 28 பந்துகளில் சதம் அடித்திருக்கிறார். அதே ஆண்டு,
அபிஷேக் ஷர்மா 28 பந்துகளில் சதம் விளாசினார். 2018ம் ஆண்டு ரிஷப் பண்ட் 32 பந்துகளில் சதம் அடித்திருந்தார். தற்போது வைபவ் சூர்யவன்ஷி 32 பந்துகளில் சதம் விளாசி இருக்கிறார்.
297 ரன்கள் குவித்த இந்திய ஏ
வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி சதத்தால் இந்தியா ஏ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழந்து 297 ரன்கள் குவித்தது. இந்திய அணி கேப்டன் ஜிதேஷ் சர்மா 32 பந்துகளில் 8 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 83 ரன்கள் விளாசி களத்தில் இருந்தார். நமன் தீர் 34 ரன்கள் எடுத்தார்.
====