

ரஞ்சி டிராபி கிரிக்கெட்
Meghalaya's Akash Choudhary Hits 8 Consecutive Sixes in Ranji Trophy 2025 : இந்தியாவில் நடைபெற்று வரும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி, முதல்தர கிரிக்கெட் போட்டியாக திகழ்ந்து வருகிறது. பிளேட் குரூப் ஆட்டம் ஒன்றில் மேகலயா - அருணாச்சல பிரதேச அணிகள் விளையாடி வருகின்றன.
ஒரே ஓவரில் 6 சிக்சர்கள்
இந்த ஆட்டத்தில் மேகாலயா வீரர் ஆகாஷ் சௌத்ரி அருணாசலப் பிரதேச அணிக்கு எதிராக ஒரே ஓவரில் 6 சிக்சர்களை விளாசி கேரி சோபர்ஸ், ரவி சாஸ்திரி ஆகியோருடன் சாதனைப் பட்டியலில் இணைந்தார். அருணாச்சலப் பிரதேச இடது கை சுழற்பந்து வீச்சாளர் லிமார் காளி தாபி வீசிய ஒரு ஓவரில்தான் ஆகாஷ் சவுத்ரி 6 சிக்சர்களை விளாசி சாதனைப்பட்டியலில் இணைந்தார்.
1984-85 ரஞ்சி டிராபியில் ரவி சாஸ்திரி 6 சிக்சர்களை திலக்ராஜ் என்ற பவுலரை விளாசிய பிறகு இப்போதுதான் மீண்டும் ரஞ்சியில் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் சாதனைக்குச் சொந்தக்காரார் ஆனார் ஆகாஷ் சவுத்ரி. முதல் தரக் கிரிக்கெட்டில் இத்தகைய சாதனை மூன்றாவது முறையாக நிகழ்கிறது.
11 பந்துகளில் அரைசதம்
ஆகாஷ் சௌத்ரி(Akash Choudhary 8 Sixes) 8 பவுண்டரிகளுடன் 11 பந்துகளில் அரைசதம் கண்டு இன்னொரு சாதனையையும் நிகழ்த்தினார். இதன் மூலம் முதல் தர கிரிக்கெட்டிலேயே அதிவேக அரைசத வரலாற படைத்தார் அவர்.
இதற்கு முன்னர் 2012-ம் ஆண்டில் எஸ்செக்ஸ் அணிக்கு எதிராக லீஷயர் அணிக்காக வெய்ன் ஒயிட் என்ற வீரர் 12 பந்துகளில் அரைசதம் எடுத்து சாதனை படைத்தார். 1965-ல் நாட்டிங்கம் ஷயர் அணிக்கு எதிராக இதே லீ ஷயர் வீரர் கிளைவ் இன்மேன் 13 பந்துகளில் அரைசதம் கண்டார்.
சர்வதேச கிரிக்கெட்டில் 2007 ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்காவின் ஹெர்ஷல் கிப்ஸ் ஒரே ஒவரில் 6 சிச்கர்களையும், டி20 உலகக்கோப்பையில் யுவராஜ் சிங் ஒரே ஓவரில் 6 சிக்சர்களையும், இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸின் கிரன் போலார்டு ஒரே ஓவரில் 6 சிக்சர்களையும் விளாசி இருந்தனர்.
பேட்டிங்கில் அசத்தும் ஆகாஷ் குமார் சௌத்ரி :
ஆகாஷ் குமார் சௌத்ரி 25 வயதாகும் மேகாலயா அணி வீரர். இயற்பெயர் ஆகாஷ்குமார் சவுத்ரி. வலது கை பேட்டர், வலது கை வேகப்பந்து வீச்சாளர். இதுவரை 30 முதல்தரப் போட்டிகளில் ஆடி 503 ரன்களையும் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 28 போட்டிகளில் 203 ரன்களையும் டி20களில் 30 ஆட்டங்களில் 107 ரன்களையும் எடுத்துள்ளார்.
====