Arshdeep Singh T20 Wickets Record in Asia Cup 2025 in Tamil https://x.com/BCCI?r
விளையாட்டு

Asia Cup: டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்: அர்ஷ்தீப் சிங் சாதனை

Arshdeep Singh T20 Wickets Record in Asia Cup 2025 : இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங், டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

Kannan

இந்தியாவின் வெற்றி தொடர்கிறது :

Arshdeep Singh T20 Wickets Record in Asia Cup 2025 : ஆசிய கோப்பை 2025 தொடரின் 12வது போட்டியில், ஓமன் அணியை வீழ்த்திய இந்திய(India vs Oman) அணியின் வெற்றிப் பயணமானது குரூப் சுற்றின் கடைசி போட்டியில் இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் ஓமனை வீழ்த்தியது.

அர்ஷ்தீப் சிங் வரலாற்று சாதனை :

இந்த ஆட்டத்தில் இந்தியாவின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் புதிய வரலாறு படைத்து(Arshdeep Singh Wickets) இருக்கிறார். T20i போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையை அவர் படைத்தார். ஓமன் வீரர் விநாயக் சுக்லாவை ஆட்டமிழக்கச் செய்த போது, இந்தச் சாதனையை அவர் நிகழ்த்தினார். இதுவரை எந்த இந்திய பந்துவீச்சாளரும் டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தியதில்லை. தற்போது அந்த பட்டியலில் இணைந்த முதல் இந்திய பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் என்பது குறிப்பிடத்தக்கத.

அணியில் தொடர்வாரா அர்ஷ்தீப் சிங்? :

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் முதல் இரண்டு ஆட்டங்களில் விளையாடாத அர்ஷ்தீப் சிங்(Arshdeep Singh in Asia Cup), ஓமனுக்கு எதிராக விளையாடிய முதல் போட்டியிலேயே சாதனை படைத்து அசத்தியுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 சுற்றில் இவருக்கு வாய்ப்பு கிடைக்குமா? எனத் தெரியவில்லை.

மேலும் படிக்க : Asia Cup 2025 Match: இந்தியா ஹாட்ரிக் வெற்றி : ஆட்ட நாயகன் சாம்சன்

ஓமன் அணி போராடி தோல்வி :

இந்த ஆட்டத்தில் ஓமன் அணிக்கு இந்தியாவுக்கு எதிராக வலிமையான(India vs Oman Highlights) எதிர்ப்பை பதிவு செய்தது. 200 ரன்களுக்குள் இந்தியாவின் வேகத்தை முடக்கிய ஓமன், வெற்றி இலக்கை நெருங்கி வந்து தோல்வியை தழுவியது. அந்த அணியின் ஆமிர் கலீம் 46 பந்தில் 7 பவுண்டரி, 2 சிக்சருடன் 64 ரன்கள் எடுத்தார். ஹம்மாத் மிர்ஸா 33 பந்தில் 5 பவுண்டரி 2 சிக்சருடன் 51 ரன் எடுத்து சிறப்பாக பேட்டிங் செய்தார்.

======