Asia Cup 2025 Match: இந்தியா ஹாட்ரிக் வெற்றி : ஆட்ட நாயகன் சாம்சன்

India vs Oman Match Highlights in Asia Cup 2025 : ஆசிய கோப்பை டி20 கிரிக்​கெட் தொடரில் ஓமானை வீழ்த்திய இந்தியா ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது.
India vs Oman Match Highlights in Asia Cup 2025 in Tamil
India vs Oman Match Highlights in Asia Cup 2025 in Tamil
2 min read

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் :

India vs Oman Match Highlights in Asia Cup 2025 : ஐக்கிய அரபு எமிரேட்சில் (UAE) ஆசிய கோப்பை ('டி-20') 17வது சீசன் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான் உட்பட 8 அணிகள் விளையாடி வருகின்றன. அபுதாபியில் நேற்று நடந்த 'ஏ' பிரிவு லீக் போட்டியில், ஏற்கனவே 'சூப்பர்-4' சுற்றுக்கு முன்னேறிய இந்திய அணி, ஓமனை எதிர்கொண்டது.

சஞ்சு சாம்சன் அரை சதம் :

இந்​திய அணி​யில்(Indian Squad for Asia Cup) ஜஸ்​பிரீத் பும்​ரா, வருண் சக்​ர​வர்த்திக்கு பதிலாக ஹர்​ஷித் ராணா, அர்​ஷ்தீப் சிங் ஆகியோர் சேர்க்​கப்​பட்​டனர். டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்தது. அதி​கபட்​ச​மாக சஞ்சு சாம்​சன் 45 பந்​துகளில், 3 பவுண்​டரி​கள், 3 சிக்​ஸர்​களு​டன் 56 ரன்​கள் விளாசி​னார்(Sanju Samson Runs). அவர், 41 பந்​துகளில் அரை சதம் கடந்​​தார். சர்​வ​தேச டி20 அரங்​கில் சஞ்சு சாம்​சனுக்கு இது 3வது அரைசத​மாகும்.

இந்திய அணி ரன் குவிப்பு :

ஷுப்​மன் கில் 5 ரன்​களில் போல்​டா​னார். அபிஷேக் சர்மா 15 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 5 பவுண்​டரி​களு​டன் 38 ரன்​கள் எடுத்த நிலை​யில் ராமானந்தி பந்​தில் வெளி​யேறி​னார். ஹர்​திக் பாண்​டியா ஒரு ரன் எடுத்த நிலை​யில் ரன் அவுட் ஆனார். அக்​சர் படேல் 13 பந்​துகளில் 26 ரன்​களும், திலக் வர்மா 18 பந்​துகளில் 29 ரன்​களும், ஷிவம்துபே 5 ரன்களும், அர்​ஷ்தீப் சிங் ஒரு ரன்​னும் சேர்த்து ஆட்​ட​மிழந்​தனர். ஹர்​ஷித் ராணா 13 ரன்​களும், குல்​தீப் யாதவ் ஒரு ரன்​னும் சேர்த்து ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர். இந்​திய அணி 20 ஓவர்​களில் 8 விக்​கெட்​கள் இழப்​புக்கு 188 ரன்​கள் குவித்​தது.

இந்திய அணி ஹாட்ரிக் வெற்றி :

189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஓமன் அணி விளையாடியது. ஆமீர் கலீம் 64 ரன்கள், ஹம்மாத் மிர்சா 51 ரன்களும் எடுத்தனர். அந்த அணியின் கேப்டன் ஜதீந்தர் சிங் 32 ரன்கள் எடுத்தார்.

ஓமன் அணியால் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 167 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதையடுத்து 21 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது(India Defeats Oman in Asia Cup 2025). ஆட்ட நாயகன் விருதை சஞ்சு சாம்சன் பெற்றார்.

மேலும் படிக்க : Asia Cup 2025 : பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அசத்தல் வெற்றி

அர்ஷ்தீப் சிங் 100 விக்கெடுகள் :

சர்வதேச 'டி-20'ல் 100 விக்கெட் சாய்த்த முதல் இந்திய பவுலர் ஆனார் அர்ஷ்தீப் சிங். இவர் 64 போட்டியில் இம்மைல்கல்லை எட்டினார். சகால் (96), ஹர்திக் பாண்ட்யா (96), பும்ரா (92) அடுத்தடுத்து உள்ளனர்.

===========

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in