Smriti Mandhana's ICC ODI Batting Rankings in Tamil https://x.com/ICC?
விளையாட்டு

ICC ODI Batting Ranking : மீண்டும் முதலிடத்தில் ஸ்மிருதி மந்தனா

Smriti Mandhana's ICC ODI Batting Rankings : ஐசிசி ஒருநாள் போட்டிக்கான பேட்டர் தரவரிசையில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, மீண்டும் முதலிடத்தை பிடித்தார்.

Kannan

பேட்டர் தரவரிசை - முதலிடத்தில் மந்தனா :

Smriti Mandhana's ICC ODI Batting Rankings : ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ( ICC ) துபாயில் வெளியிட்டது. அதன்படி, பேட்டர் தரவரிசையில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா, 735 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருந்து மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறி சாதனை படைத்தார்.

ஆஸி. வீராங்கனைகள் ஆதிக்கம் :

இங்​கிலாந்​தின் நாட் ஸ்கைவர்​-பிரண்ட் 731 புள்​ளி​களு​டன் 2வது இடத்​துக்கு தள்​ளப்​பட்​டார்(ICC Women ODI Ranking List). 3வது இடத்தில் தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட் (725 புள்ளி) உள்ளார். ஆஸி வீராங்கனைகள் எலிசி பெரி 4, பெத் மூனி 5, ஆலிசா ஹீலி 6ம் இடங்களை பிடித்துள்ளனர்.

இந்திய வீராங்கனைகள் முன்னேற்றம் :

2019ம் ஆண்டு தரவரிசையில் முதன்முறையாக முதலிடத்தை கைப்பற்றிய ஸ்மிருதி(Smriti Mandhana), சமீபத்தில் நியூ சண்டிகரில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 63 பந்துகளில், 58 ரன்களை விளாசினார் ஸ்மிருதி மந்தனா. இந்தப் போட்டியில் அரைசதம் விளாசிய மற்ற இந்திய வீராங்கனைகளான பிரதிகா (499), ஹர்லீன் தியோல் (497) ஆகியோர், 42, 43வது இடத்திற்கு முன்னேறினர்.

மேலும் படிக்க : ஐசிசி பேட்டிங் தரவரிசை - ஸ்மிருதி மந்தனா முதலிடம்

பவுலர் தரவரிசையில் இந்தியாவின் ஸ்னே ராணா (530 புள்ளி) 21வது இடத்தில் இருந்து 15வது இடத்துக்கு முன்னேறினார். இங்கிலாந்தின் சோபி எக்லெஸ்டோன் (795) முதலிடத்தில் நீடிக்கிறார்.