ஐசிசி பேட்டிங் தரவரிசை - ஸ்மிருதி மந்தனா முதலிடம்

Smriti Mandhana ICC ODI Batting Rankings : ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான பேட்டிங் தரவரிசையில், இந்திய அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.
Smriti Mandhana ICC ODI Batting Rankings in Tamil
Smriti Mandhana ICC ODI Batting Rankings in Tamil
1 min read

Smriti Mandhana ICC ODI Batting Rankings in Tamil : ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான மகளிர் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(International Cricket Council) வெளியிட்டு இருக்கிறது.

இதில், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா(India Women's Team Vice Captain Smriti Mandhana), ஆறு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் முதலிடம் பிடித்து அசத்தி உள்ளார்.

2019ம் ஆண்டு பேட்டிங் தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா முதலிடம் பெற்று இருந்தார்.

727 புள்ளிகளுடன் ஸ்மிருதி மந்தனா முதலிடத்தை பிடித்து இருக்கிறார். இங்கிலாந்து அணியின் கேப்டன் நாட் ஷிவர் பிரண்ட் 2ம் இடத்திலும், தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் லாரா வோல்வர்ட் 3வது இடத்திலும் உள்ளனர்.

ஸ்மிருதி மந்தனாவை தவிர்த்து, இந்திய வீரங்கனைகள் சிலரும் பட்டியலில் இடம் பெற்று இருக்கிறார்கள்.

மேலும் படிக்க : ICC Rank : ஐசிசி பேட்ஸ்மேன்கள் தரவரிசை : ஜோ ரூட் மீண்டும் முதலிடம்

ஜிமிமா ரோட்ரிக்ஸ் 14வது இடத்திலும், கேப்டன் ஹர்மன் பிரீத்கவுர் 15வது இடத்திலும் உள்ளனர்.

அண்மையில் நடைபெற்ற முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் சிறப்பாக(Sri Lanka Women's ODI Tri-Series 2025) செயல்பட்ட இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா, டி20 பேட்டிங் தரவரிசையில் 4ம் இடத்தில் உள்ளார்.

மேலும் படிக்க : Shubman Gill: ICC ஜூலை மாத சிறந்த வீரர்: "சுப்மன் கில்"க்கு விருது

=====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in