அதிரடி வீரர் மேத்யூ ப்ரீட்ஸ்கி :
Matthew Breetzke ODI Debut Record : தென்னாப்பிரிக்க ஒருநாள் அணியில், சீனியர்கள் ஓரங்கட்டப்பட்டு, இளம் வீரர்களுக்கு அதிகளவில் வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தான், மேத்யூ ப்ரீட்ஸ்கி ( Matthew Paul Breetzke ) மிடில் வரிசைக்குள் வந்தார். அவருக்கு 4வது இடம் வழங்கப்பட்டது. கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி ரன் மிஷினாக களத்தில் இருக்கிறார் மேத்யூ ப்ரீட்ஸ்கி.
கிப்ஸ் சாதனை முறியடிப்பு :
இங்கிலாந்திற்கு எதிரான 2ஆவது ஒருநாள்(South Africa vs England ODI Match) போட்டியில், 77 பந்துகளில் 85 ரன்களை அடித்ததன் மூலம், சாதனையை அவர் படைத்துள்ளார்.
லண்டன் லார்ட் மைதானத்தில், தென்னாப்பிரிக்காவுக்காக அதிக ரன்களை அடித்த வீரராக கிப்ஸ் இருந்தார். 2008ம் ஆண்டில், 74 ரன்களை அவர் அடித்திருந்தார். இதை பிரிட்ஸ்கி தகர்த்து உள்ளார். .
ஒருநாள் கிரிக்கெட்டில் சாதனை :
தென்னாப்பிரிக்க அணிக்காக தொடர்ச்சியாக 5 அரை சதங்கள் அடித்தோர் பட்டியலில் ஜான்டி ரோட்ஸ், குவின்டன் டி காக், ஹென்ரிக் கிளாசின் ஆகியோர் பட்டியலில், பிரீட்ஸ்கியும் இடம்பெற்றுள்ளார். இதில் அவர் வரலாற்று சாதனை படைத்து இருப்பது தான் சிறப்பு. அது என்னவென்றால், பிரீட்ஸ்கி இதுவரை 5 போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கிறார். அனைத்து ஆட்டங்களிலும் அரை சதம் எடுத்துள்ள அவர், இதுவரை எந்த வீரரும் செய்யாத சாதனையை பதிவு செய்துள்ளார்.
சாதனையை முறியடிப்பது கடினம் :
இது ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனையாகும். இது முறியடிப்பது அவ்வளவு எளிதாக இருக்காது என்பது உண்மைதான். இதன் காரணமாக வரும் போட்டிகளில் பிரீட்ஸ்கி எத்தகைய அற்புதங்களை நிகழ்த்த போகிறார் என்ற எதிர்பார்ப்பு எகிறுகிறது.
மேலும் படிக்க : Amit Mishra: ஓய்வை அறிவித்தார் அமித் மிஸ்ரா: 25 ஆண்டு பயணம் நிறைவு
தென்னாப்பிரிக்க அணிக்காக டி.20, டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி வரும் பிரீட்ஸ்கி இதுவரை அவற்றில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அதேசமயம் ஒருநாள் போட்டிகளில் அதிரடி காட்டி ரசிகர்கள் ஈர்த்து வருகிறார். வரும் காலங்களில் மற்ற போட்டிகளிலும் பிரீட்ஸ்கி அதிரடி காட்டுவார் என ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர்.
===============