
கிரிக்கெட் வீரர் அமித் மிஸ்ரா :
Amit Mishra Retirement : ஹரியானா மாநிலத்தை சேர்ந்த அமித் மிஸ்ரா, கிரிக்கெட் மீது கொண்ட அதீத ஆர்வம் காரணமாக உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்தார். 2000-மாவது ஆண்டு ஹரியானாவில் நடைபெற்ற உள்ளூர் போட்டிகளில் அவர் தடம் பதித்தார்(Amit Mishra Debut). அதன் பிறகு அவரது ஏற்றம் ஆரம்பித்தது.
இந்திய அணியில் இடம் :
2003ம் ஆண்டு இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்தார். 2008ம் இந்திய டெஸ்ட் அணியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. 2010ம் ஆண்டு டி20 அணியிலும் அவர் இணைந்து, வலதுகை ( Leg break ) பந்துவீச்சாளராக தனது திறமையை வெளிப்படுத்தினார்.
சிறந்த பந்து வீச்சாளர் :
இந்திய கிரிக்கெட் அணிக்காக 36 ஒருநாள் போட்டிகளில் 64 விக்கெட்டுகளையும், 22 டெஸ்ட் போட்டிகளில் 76 விக்கெட்டுகளையும் அமித் மிஸ்ரா வீழ்த்தியுள்ளார். 2016ம் ஆண்டுக்கு பிறகு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அவர் விளையாடவில்லை. 201இல் கடைசியாக டி20 போட்டியில் விளையாடினார். முதல் தர போட்டிகளில் 2017ஆம் ஆண்டு வரையிலும், லிஸ்ட் ஏ போட்டிகளில் 2019ஆம் ஆண்டு வரையிலும் அமித் மிஸ்ரா பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.
ஐபிஎல் தொடரில் அமித் மிஸ்ரா :
ஐபிஎல் தொடரை பொறுத்தவரை 2008ஆம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டுவரை தொடர்ந்து விளையாடியிருக்கிறார், 2022இல் மட்டும் விளையாடவில்லை. டெல்லி டேர்டெவில்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ்,, சன்ரைசர்ஸ் ஹைதராபாத், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் உள்ளிட்ட அணிகளில் அமித் மிஸ்ரா(Amit Mishra Retirement IPL) விளையாடி உள்ளார்.
162 இன்னிங்ஸ், 174 விக்கெட்டுகள் :
மொத்தம் 162 இன்னிங்ஸ்களில் 174 விக்கெட்டுகளை மிஷ்ரா சரித்துள்ளார். கடைசியாக 2024ம் ஆண்டு லக்னோவில் நடந்த ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி சார்பில் களம்கண்டார்(Amit Mishra Stats). ஐபிஎல் வரலாற்றில் மூன்று முறை (2008, 2011, 2013 ) ஹாட்ரிக் விக்கெட்டுகளை பதிவு செய்த ஒரே வீரர் இவர்தான். எந்த அணியும் கடந்த மெகா ஏலத்தில் எடுக்காத நிலையில், தனது ஓய்வு அறிவிப்பு இன்று வெளியிட்டார் அமித் மிஸ்ரா.
அமித் மிஸ்ரா ஓய்வு :
42 வயதாகும் அமித் மிஸ்ரா, ”தொடர்ச்சியான காயங்கள் மற்றும் இளைய கிரிக்கெட் வீரர்களுக்கு வழிவிட வேண்டும் என்கிற தனது விருப்பத்தை மேற்கோள் காட்டி, அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுகிறேன்(Amit Mishra Retirement From All Formats). கிரிக்கெட்டில் எனது இந்த 25 ஆண்டுகள் வாழ்க்கை மறக்க முடியாதது.
அனைவருக்கும் நன்றி, நன்றி :
இந்தக் காலத்தில் என்னுடன் இருந்த பிசிசிஐ, நிர்வாகம், ஹரியானா கிரிக்கெட் சங்கம், துணை ஊழியர்கள், எனது சக ஊழியர்கள் மற்றும் எனது குடும்ப உறுப்பினர்களுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நான் விளையாடிய போதெல்லாம், எங்கிருந்தாலும் அன்பும் ஆதரவும் இந்தப் பயணத்தை மறக்க முடியாததாக மாற்றிய ரசிகர்களுக்கு நன்றி.
மேலும் படிக்க : ஐபிஎல் கிரிக்கெட் இருந்து அஸ்வின் ஓய்வு: T20 லீக்கில் விளையாடுவார்
வாழ்க்கையை மாற்றிய கிரிக்கெட்
கிரிக்கெட் எனக்கு எண்ணற்ற நினைவுகளையும், விலைமதிப்பற்ற கற்றல்களையும் அளித்துள்ளது.மைதானத்தில் உள்ள ஒவ்வொரு தருணமும் நான் வாழ்நாள் முழுவதும் பொக்கிஷமாக வைத்திருக்கும் ஒரு நினைவாக இருந்து வருகிறது" என அமித் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
===========